ஐஎன்எஸ் சில்காவில் பிரிவு 01/2021-ன் பயிற்சி நிறைவு விழா


பாதுகாப்பு அமைச்சகம் ஐஎன்எஸ் சில்காவில் பிரிவு 01/2021-ன் பயிற்சி நிறைவு விழா


இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் பிரிவு 01/2021-ஐ சேர்ந்த 2142 பயிற்சியாளர்கள் தெற்கு கடற்படை தளத்தின் கீழ் உள்ள ஐஎன்எஸ் சில்காவில் பயிற்சி நிறைவு செய்ததற்கான நிகழ்ச்சி 2021 ஜூலை 9 அன்று நடைபெற்றது.

இந்திய கடற்படை பயிற்சி நிலையத்தின் தலைவர் துணை அட்மிரல் எம் ஏ ஹம்பிஹோலி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 21 வாரங்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை  தலைமை விருந்தினர் வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அட்மிரல், பயிற்சியை நிறைவு செய்துள்ளவர்கள் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டு, தங்களது பணியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கடற்படையின் அடிப்படை விழுமியங்களான ‘கடமை, மரியாதை மற்றும் வீரத்தை’ உயர்த்திப் பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய கடற்படையை சேர்ந்த ஆசிஷ் சவுத்ரி, குல்ஷன் குமார் மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த கெய்க்வாட் அஜித் சுரேஷ் மற்றும் ராத்தூர் ஆகியோர் சிறந்த பயிற்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

முன்னதாக, 2021 ஜூலை 8 அன்று கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பையை சிவாஜி பிரிவுக்கும், இரண்டாவது பரிசை ஏகலைவா பிரிவுக்கும் அட்மிரல் வழங்கினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா