ஒத்திவைக்கப்பட்ட தேர்வர்களுக்கு ஒருங்கிணைந்த மேல்நிலை (10, +2) அளவிலான தேர்வு, 2020: (பிரிவு-I) பகுதி 2 தெற்கு மண்டலத்தில் ஆகஸ்ட் 04 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும்.

ஒருங்கிணைந்த மேல்நிலை (10, +2) அளவிலான தேர்வு, 2020: (பிரிவு-I) பகுதி 2 கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 2021 ஏப்ரல் 20 முதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட தேர்வர்களுக்காக ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி (10 +2) அளவிலான தேர்வு 2020 (பிரிவு-I) பகுதி-2-ஐ கணினி வாயிலாக பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தவிருக்கிறது.

தெற்கு மண்டலத்தில் 1,83,871 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 மையங்கள்/நகரங்களில் உள்ள 32 இடங்களில் தேர்வு நடைபெறும். ஆந்திரப் பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரத்திலும், தெலங்கானாவின் ஹைதராபாத், கரீம்நகர், வாராங்கல்லிலும், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மற்றும் வேலூரிலும் இந்தத் தேர்வு நடைபெறும்.

தெற்கு மண்டலத்தில் இந்தத் தேர்வு 04.08.2021, 05.08.2021,  06.08.2021 மற்றும் 09.08.2021 முதல் 12.08.2021 வரை மொத்தம் 7 நாட்கள் நடைபெறும். நாளொன்றுக்கு மூன்று கட்டங்களாக- காலை 9 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறும்.

மின்னணு அனுமதி சான்றிதழை பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் தேர்வு தேதிக்கு நான்கு நாட்கள் முன்பில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள விண்ணப்பங்களில் அளிக்கப்பட்டுள்ள செல்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் இந்தத் தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட பொருட்களான கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு சீட்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (கைபேசிகள், புளூடூத் கருவிகள், ஹெட்போன், எழுதுகோல்/பொத்தான்/உளவு புகைப்பட கருவிகள், ஸ்கேனர், கால்குலேட்டர், சேமிப்பு கருவிகள் மற்றும் பல) ஆகியவற்றுக்கு தேர்வு அறைக்குள் அனுமதி இல்லை. இவற்றில் ஏதாவது தேர்வு அறைக்குள் தேர்வரிடம் இருந்து கண்டறியப்பட்டால், அவருக்கான தேர்வு அனுமதி ரத்து செய்யப்படுவதோடு, சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும். மூன்று முதல் ஏழு வருடங்கள் வரை தேர்வெழுதவும் அனுமதி மறுக்கப்படும். எனவே, தடைசெய்யப்பட்ட பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு வர வேண்டாம் என்று தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னணு அனுமதி சான்றிதழ் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாள அட்டைகளின் அசல் ஆகியவை இல்லாமல் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் மின்னணு அனுமதி சான்றிதழை கட்டாயம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுபற்றிய சந்தேகங்களுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தின் உதவி எண்களை (தொலைபேசி- 044 28251139, செல்பேசி- 9445195946) விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்.

கொவிட்- 19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆணையம் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் சுமூகமான தேர்வை எதிர்கொள்வதற்கு மின்னணு அனுமதி சான்றிதழுடன் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணியாளர் தேர்வு ஆணையத்தின் (தெற்கு மண்டலம்) இணைச் செயலாளர் மற்றும் மண்டல இயக்குநர் திரு கே நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா