டிஆர்டிஓ வின் குறுகிய கால பால அமைப்பு-10 இந்திய ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது

பாதுகாப்பு அமைச்சகம் டிஆர்டிஓ வின் குறுகிய கால பால அமைப்பு-10 இந்திய ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 12 குறுகிய கால பால அமைப்பு (எஸ் எஸ் பி எஸ்)-10 எம், 2021 ஜூலை 2 அன்று தில்லி கன்டோன்மென்ட்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவணேவால் ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இடைவெளிகளை நிரப்பி படைகளின் வேகமான போக்குவரத்துக்கு உதவும் எஸ் எஸ் பி எஸ்-10 எம், டிஆர்டிஓவின் முன்னணி பொறியியல் ஆய்வகமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (பொறியாளர்கள்), புனேவால் எல்&டி லிமிடெட்டுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. உற்பத்தி நிறுவனமான எல்&டி லிமிடெட்டின் 102 எஸ் எஸ் பி எஸ்-10 எம்மின் பகுதியாக இந்த 12 பாலங்கள் அமைந்துள்ளன.

பால அமைப்பின் வெற்றிகரமான உருவாக்கம் மற்றும் இணைப்புக்காக டிஆர்டிஓ, இந்திய ராணுவம் மற்றும் தொழில்துறையை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் பாராட்டியுள்ளார்.

வேகமாக வளர்ந்து வரும் இந்திய ராணுவ தொழில் சூழலியலுக்கு இந்த இணைப்பு ஊக்கமளிக்கும் என்றும், தற்சார்பு இந்தியாவுக்கு பங்காற்றும் என்றும் அவர் கூறினார்.

பால அமைப்பின் உருவாக்கம் மற்றும் இணைப்பில் வெற்றிகரமாக செயல்பட்ட குழுக்களுக்கு டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா