ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை பகிர்வதற்காக தொடங்கப்பட்ட ஐ-ஸ்டெம் இணையதளம் 2வது கட்டத்தில் நுழைகிறது: 5 ஆண்டு நீட்டிப்புக்கு அனுமதி

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை பகிர்வதற்காக தொடங்கப்பட்ட ஐ-ஸ்டெம் இணையதளம் 2வது கட்டத்தில் நுழைகிறது: 5 ஆண்டு நீட்டிப்புக்கு அனுமதி
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை பகிர்வதற்காக தொடங்கப்பட்ட ஐ-ஸ்டெம் இணையதளம் 2வது கட்டத்தில் நுழைகிறது. இதற்கு  5 ஆண்டு நீட்டிப்பை, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வழங்கியுளளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை பகிர்ந்து கொள்வதற்காக ஐ-ஸ்டெம் (The Indian Science Technology and Engineering facilities Map (I-STEM), என்ற தேசிய இணையதளம் கடந்த 2020 ஜனவரியில், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

ஐ-ஸ்டெம்  (www.istem.gov.in)  என்ற இந்த இணையதளம் பிரதமரின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஆலோசனை கவுன்சில் (PM-STIAC) திட்டத்தின் கீழ் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் முயற்சியால் தொடங்கப்பட்டது.

ஐ-ஸ்டெம் திட்டத்துக்கு, 2026ம் ஆண்டு வரை 5 ஆண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டம் கூடுதல் அம்சங்களுடன் 2வது கட்டத்துக்கு நுழைகிறது.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி வளங்களை ஒருங்கிணைத்து நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலை வலுப்படுத்துவதுதான் ஐ-ஸ்டெம் திட்டத்தின் இலக்கு. இது நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் நிதியை ஐ-ஸ்டெம் இணையதளம் மூலம் வழங்குகிறது.

இரண்டாவது திட்டத்தின் கீழ், இந்த ஐ-ஸ்டெம் இணையதளம், டிஜிட்டல் அட்டவணை மூலம் பட்டியலிடப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை  வழங்கும். இந்த இணையதளம்,  பல்வேறு நகர அறிவு மற்றும் கண்டுபிடிப்புக் தொகுப்புகளுக்கான தளத்தையும் வழங்கும். (https://www.psa.gov.in/st-clusters)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா