ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஜூலை 20-ந் தேதி ஓய்வூதியர் குறை தீர்ப்புக் கூட்டம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டம் ஜூலை 20-ந் தேதி


சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலை, இலக்கம் 37-ல் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகத்தில் ஓய்வூதியருக்கான குறை தீர்ப்புக் கூட்டம் இம்மாதம் 20-ந் தேதியன்று (20.07.2021) மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கானது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகம், சென்னை வடக்கு, சென்னை தெற்கு ஆகிய அலுவலகங்களிலிருந்து பென்ஷன்  பேமண்ட் ஆர்டர் எனப்படும் ஓய்வூதிய ஆணை பெற்ற ஓய்வூதியர்கள் இந்த வலைதளக் கூட்டத்தில் தமது குறைகளைத் தெரிவிக்கலாம்.

ஓய்வூதியம் தொடர்பான குறைகளை, “ஓய்வூதிய குறை தீர்ப்புக் கூட்டம் – ஈபிஎஸ் 1995” என்ற தலைப்பிட்டு, மின்னஞ்சல் வாயிலாக 16.07.2021 மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு, pension.rochn1@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தமது பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், UAN / PPO எண், புகார் விவரங்கள் போன்ற அனைத்தையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது மொபைல் எண் / மின்னஞ்சல் முகவரிக்கு, ஓய்வூதியர் குறை தீர்ப்பு வெபினாருக்கான லிங்க் அனுப்பப்படும் என்று சென்னை ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய ஆணையர் (1) திரு.ரித்து ராஜ் மேத்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா