குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகம் பொதுமக்கள் பார்வைக்காக 2021 ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படுகிறது

குடியரசுத் தலைவர் செயலகம் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகம் பொதுமக்கள் பார்வைக்காக 2021 ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.கொவிட்-19 காரணமாக 2021 ஏப்ரல் 14 முதல் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பார்வைக்காக 2021 ஆகஸ்ட் 1 முதல் அவை மீண்டும் திறக்கப்படுகின்றன,

காலை 10.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட மூன்று நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 25 பேர் என சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறைகள் தவிர்த்து) குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றுலா அனுமதிக்கப்படும்.

செவ்வாய் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஆறு நாட்களில் (அரசு விடுமுறைகள் தவிர்த்து), காலை 9.30 முதல் 11 மணி வரை, காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட நான்கு நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 50 பேருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியக வளாகம் திறந்திருக்கும்.

https://presidentofindia.nic.in அல்லது https://rashtrapatisachivalaya.gov.in/ அல்லது https://rbmuseum.gov.in/ ஆகிய தளங்களில் பார்வையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா