2021 ஜூன் மாதத்தில் 112.65 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது இந்திய இரயில்வே.

இரயில்வே அமைச்சகம்  2020 செப்டம்பர் முதல் 2021 ஜூன் வரை அதிகளவிலான சரக்குகளை ரயில்வே கையாண்டது.


கொவிட் சவால்களுக்கு மத்தியிலும் இந்திய ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து பணிகள் தொய்வின்றி அதிகளவில் நடைபெற்று வருகின்றன.

2021 ஜூன் மாதத்தில் 112.65 மில்லியன் டன் சரக்குகளை இந்திய ரயில்வே கையாண்டது. 2019 ஜூனுடன் (101.31 மில்லியன் டன்) ஒப்பிடும் போது இது 11.19 சதவீதமும், 2020 ஜூனுடன் (93.59 மில்லியன் டன்) ஒப்பிடும் போது இது 20.37 சதவீதமும் அதிகமாகும்.50.03 மில்லியன் டன் நிலக்கரி, 14.53 மில்லியன் டன் இரும்புத் தாது, 5.53 மில்லியன் டன் இரும்பு மற்றும் எஃகு, 5.53 மில்லியன் டன் உணவு தானியங்கள், 4.71 மில்லியன் டன் உரங்கள், 3.66 மில்லியன் டன் மினரல் எண்ணெய், 6.59 மில்லியன் டன் சிமெண்ட் மற்றும் 4.28 மில்லியன் டன் கிளின்கர் உள்ளிட்டவை 2021 ஜூன் மாதம் எடுத்து செல்லப்பட்ட முக்கிய பொருட்களாகும்.

சரக்கு கையாளுதல் மூலம் ரூ 11186.81 கோடியை 2021 ஜூன் மாதம் இந்திய ரயில்வே ஈட்டியது. 2019 ஜூனுடன் (ரூ 10707.53 கோடி) ஒப்பிடும் போது இது 4.48 சதவீதமும், 2020 ஜூனுடன் (ரூ 8829.68 கோடி) ஒப்பிடும் போது இது 26.7 சதவீதமும் அதிகமாகும்.

தனது செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக கொவிட்-19-ஐ இந்திய ரயில்வே பயன்படுத்தி வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா