தொலைப்பேசி குறைதீர்ப்பு நாள் மற்றும் திறந்தவெளி கூட்டம். 2021 ஜூலை 22 அன்று நடக்கிறது

2021 ஜூலை 22 அன்று தொலைப்பேசி குறைதீர்ப்பு நாள் மற்றும் திறந்தவெளி கூட்டம்
.தொலைப்பேசி, கைப்பேசி மற்றும் இணையம் உள்ளிட்ட சேவைகள் தொடர்பான குறைதீர்ப்பு நாள் மற்றும் திறந்தவெளி கூட்டங்கள் வட்டார பொது மேலாளர்கள் தலைமையில் 2021 ஜூலை 22 அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்று பிஎஸ்என்எல் சென்னை தொலைப்பேசியின் தலைமை பொது மேலாளர் டாக்டர் வி கே சஞ்சீவி அறிவித்துள்ளார்.

தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, தொலைப்பேசி குறைதீர்ப்பு நாள் மற்றும் திறந்தவெளி கூட்டங்கள் தொலைப்பேசி வாயிலாக நடத்தப்படும். வாடிக்கையாளர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தங்களது பகுதிக்கான தொலைப்பேசி எண்களை அழைக்கலாம் அல்லது தங்களது குறைகளை குறுந்தகவல்/வாட்ஸாப் மூலம் பதிவு செய்யலாம்.

அனைத்து குறைகளையும் அந்த இடத்திலேயே தீர்க்கவும், விரிவான ஆய்வு தேவைப்படும் புகார்களுக்கு 7 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு முழு திருப்தி ஏற்படும் வகையில் தீர்வு காணவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

சென்னை மத்திய பகுதியை சேர்ந்தவர்கள் துணை பொது மேலாளர், தென் கிழக்கு, மத்திய மற்றும் அடையார் மண்டலத்தை 044-28552216 என்ற தொலைப்பேசி எண்ணிலும், 9445084760 என்ற கைப்பேசி எண்ணிலும், adalatcentral@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் துணை பொது மேலாளர், வட கிழக்கு, கல்மண்டபம், வட மேற்கு, மாதவரம், அண்ணா நகர், அம்பத்தூரை 044-25395858 என்ற தொலைப்பேசி எண்ணிலும், 9445083639 என்ற கைப்பேசி எண்ணிலும்,  bsnlchnpgnorth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் துணை பொது மேலாளர், கோடம்பாக்கம், கே கே நகர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலத்தை 044-23728877 என்ற தொலைப்பேசி எண்ணிலும், 9445084745 என்ற கைப்பேசி எண்ணிலும், bsnlchnwestpg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் துணை பொது மேலாளர், தென் மேற்கு, குரோம்பேட்டை, செங்கல்பட்டு மண்டலத்தை 044-22501122 என்ற தொலைப்பேசி எண்ணிலும், 9445084018 என்ற கைப்பேசி எண்ணிலும், bsnlchnpgsouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

பிஎஸ்என்எல்-ன் www.chennai.bsnl.co.in இணையதளத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று, பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் (மக்கள் தொடர்பு), சென்னை தொலைப்பேசி, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா