கென்யாவில் கட்லஸ் எக்ஸ்பிரஸ்-21 கடல்சார் பயிற்சி: ஐஎன்எஸ் தல்வார் பங்கேற்பு

பாதுகாப்பு அமைச்சகம்  கென்யாவில் கட்லஸ் எக்ஸ்பிரஸ்-21 கடல்சார் பயிற்சி: ஐஎன்எஸ் தல்வார் பங்கேற்பு


கென்யாவில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை பல்வேறு நாடுகள் பங்கேற்கும் கட்லஸ் எக்ஸ்பிரஸ் 2021 என்ற கடல்சார் பயிற்சியில் இந்திய கடற்படையின் தல்வார் கப்பல் கலந்து கொள்கிறது. ஜூலை 26 முதல் 28 வரை மாம்பாசாவில் நடைபெற்ற துறைமுக அளவிலான பயிற்சியில் கென்யா, ஜிபௌடி, மொசாம்பிக் கேமரூன் மற்றும் ஜார்ஜியா கடலோரக் காவல் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு இந்திய கடற்படையின் கடல்சார் வீரர்கள் குழு பயிற்சி அளித்தது. மாம்பாசாவின் பண்டாரி கடல்சார் அகாடமியில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், பல்வேறு தேடுதல், கைப்பற்றுதல், பாதுகாப்பு நடவடிக்கைகளின் சிறந்த செயல்முறைகளை இந்திய வீரர்கள் வெளிநாட்டு வீரர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

மேற்கு இந்திய பெருங்கடலில் சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு இடையே பிராந்திய ஒத்துழைப்பு, கடல்சார் குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன்களை அதிகரிப்பதற்கான செயல்முறைகளை பகிர்வதற்காக கட்லஸ் எக்ஸ்பிரஸ் பயிற்சி நடத்தப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா