கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை 26.ஜூலை 2021 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 தமிழகத்திலுள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலுள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு (2021-2022) மாணவர்கள் சேர்க்கைகான விண்ணப்பங்களை 26.ஜூலை 2021 முதல் ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதளங்களை அரசுத்துறை வெளிட்டுள்ளன. ஆகிய www.tngasa.org www.tngasa.in இரு இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க முடியாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூ.48/- பதிவு கட்டணமாக ரூ.2/- வசூலிக்கப்படுகிறது. மேலும் SC / ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பதிவுக் கட்டணம் வரும். 

விண்ணப்ப கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ய என்ற பெயரில் 26.07.2021 அன்றைய தேதி முதல் அல்லது பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது  நேரடியாகவும் செலுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் தொடங்கும் நாள் 26.07.2021 முதல் இறுதி நாளாக 10.04.2021 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத்துறை தெரிவித்துள்ளது. மாணாக்கர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா