ஆவின்பணிநியமனம் ஊழல் முறைகேடுகள் காரணமாக 34 அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தின் 34 ஆவின் அதிகாரிகள்  மாற்றம். ஆவின் நிறுவனத்தின் பணிநியமனம் ஊழல் முறைகேடுகள் குறித்த புகார் காரணமாக 34 அதிகாரிகள் பணியிட மாற்றம் 


சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக ஆவினில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாக திமுக குற்றஞ்சாட்டிய

நிலையில், தற்போது பணிநியமனம் முறைகேடு, ஊழல் புகார் காரணமாக 34 ஆவின் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் உயர்ந்தாலும்கூட, பல ஆண்டுகளாக  நஷ்டத்திலேயே இயங்கி வந்ததற்கு அங்கு நடைபெற்ற முறைகேடுகள் தான் காரணம் .

சா மு நாசர் பால்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர், தீபாவளி நேரத்தில் முன்னாள் அமைச்சரான கே.டி.ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் மோசடியாக  வழங்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும்,  பணிநியமனங்களிலும் ஊழல் நடந்துள்ளதாகவும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த நிலையில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி , விருதுநகர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆவின் கூட்டுறவு மையங்களில் பல பணி நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாடுகள் எழுந்ததையடுத்து மாநிலம் முழுவதும் 236 பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது மட்டுமின்றி மற்ற பணியிடங்களை நிரப்பும் பணிகளையும் தற்காலிமாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆவின் நிறுவனத்தின் பணி நியமனம் முறைகேடு ஊழல் புகார் ஆகியவை காரணமாக 34  அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆவின் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் பால் விநியோகத்தில் கமிஷன் வாங்கிக் கொண்டு செயல்பட்ட குற்றச்சாட்டில் அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பொது மேலாளராக இருந்தவர் விழுப்புரம் சரகத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோல பணிநியமனங்களில் முறைகேடு நடந்தாக புகார் எழுந்துள்ள மாவட்டங்களில் பணிபுரிந்த மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள் உள்ளிட்ட ஆவின் அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

பால் முகவர் சங்கம் சார்பில் பொன்னுசாமியின் குற்றச்சாடுகள் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிகிறது. ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த பால் முகவர்கள் சங்கம் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. மேலும் தவறு செய்தவர்களை பணிநீக்கம் செய்துவிட்டு விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த ஏதுவாக இந்த விசாரணை விரைவில் ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்