5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் 2 லட்சம் சிறிய உணவுபதப்படுத்தும் நிறுவனங்கள் அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்

 உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் 2 லட்சம் சிறிய உணவுபதப்படுத்தும் நிறுவனங்கள் அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் தகவல்

தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் கடனுடன் கூடிய மானிய உதவியின் மூலம் 2 லட்சம் சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்கப்படும் / மேம்படுத்தப்படும் என மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கூறியுள்ளார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

மத்திய அரசு திட்டமான பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தின் (PMFME)  கீழ், இந்த நிதி நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தையும், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் 2016-17ம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் வேளாண் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கிசான் சம்பதான் திட்டத்தின் கீழ் உள்ள துணை திட்டங்கள்: (i) மிகப் பெரிய உணவு பூங்கா (ii) ஒருங்கிணைந்த குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்பு கூட்டு கட்டமைப்பு (iii) உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு திறன்கள் உருவாக்கம் / விஸ்தரிப்பு (iv) வேளாண் பதப்படுத்தும் தொகுப்புக்களுக்கான கட்டமைப்பு (v) பிற்படுத்தப்பட்ட மற்றும் முற்படுத்தப்பட்ட இணைப்புகள் உருவாக்கம் (vi) உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதி கட்டமைப்பு (vii) மனிதவளம் மற்றும் நிறுவனங்கள் (viii) பசுமை செயல்பாடுகள். இந்த துணை திட்டங்களின் கீழ் கடனுடன் தொடர்புடைய நிதி உதவியை (மூலதன மானியம்) உணவு மற்றும் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் வழங்குகிறது.

இதுவரை 41 மிகப் பெரிய உணவு பூங்காக்கள், 353 குளிர் பதன கிடங்குகள், 63 வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகள், 292 உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், 6 பசுமை செயல்பாடு திட்டங்களுக்கு உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரூ.5,792 கோடி மானியத்துடன் தனியார் துறையின் 792 உணவு பதப்படுத்தும் திட்டங்கள் தொடக்கம்:

இதுவரை 818 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 792 திட்டங்கள் தனியார் துறைகளைச் சேர்ந்தது. இதற்காக ரூ.5,792 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் 3 முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.

உணவு பதப்படுத்துல் துறையில் ரூ.10,900 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது சர்வதேச சந்தையில் இந்திய உணவு பொருட்களின் விற்பனைக்கு உதவும்.

தனியார் சிறு உணவு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு உதவ பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தை உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் அமல்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் 2 லட்சம் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அமைக்கப்படும்.

மூன்றாவதாக பசுமை செயல்பாடுகள் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைகிழங்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் இருந்தது. தற்போது இது விரைவில் அழியக்கூடிய 22 வேளாண் பொருட்களுக்கு நீட்டிக்கப்படும் என 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.

மிகப் பெரிய உணவு பூங்கா திட்டம் குறித்து மதிப்பீடு:

மிகப் பெரிய உணவு பூங்கா திட்டம் குறித்து 3 ஆம் நபர் மதிப்பீட்டை உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் சமீபத்தில் நடத்தியது.  இதில் அனுமதிக்கப்பட்ட மிகப் பெரிய உணவு பூங்காங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன. உணவு பதப்படுத்தும் கட்டமைப்பு உருவாக்குதல், மதிப்பு கூட்டு மற்றும் பதப்படுத்துதலில் இதன் தாக்கம், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்தல், விவசாயிகளுக்கு பயன்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற அம்சங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா