54 விளையாட்டு வீரர்கள் உட்பட 88 பேர் கொண்ட இந்திய ஒலிம்பிக் அணி டோக்கியா சென்றடைந்தது

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்


54 விளையாட்டு வீரர்கள் உட்பட 88 பேர் கொண்ட இந்திய ஒலிம்பிக் அணி டோக்கியா சென்றடைந்தது


விளையாட்டு வீரர்கள் 54 பேர் உட்பட, 88 பேர் அடங்கிய இந்திய ஒலிம்பிக் அணி, டோக்கியோவில் உள்ள நரிதா சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று சென்றடைந்தது.   குர்பே நகர பிரதிநிதிகள் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இந்த அணியினர் தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிஷித் பிரமணிக் ஆகியோரால் நேற்று முறைப்படி வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

பாட்மின்டன், வில் அம்பு, ஹாக்கி, ஜூடோ, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய 8 விளையாட்டு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் உதவி நபர்கள் புதுதில்லியிலிருந்து நேற்று இரவு புறப்பட்டனர். இதுவரை இல்லாத அளவில் 127 விளையாட்டு வீரர்கள், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

தில்லி  விமான நிலையத்தில் இந்திய குழுவினரிடம் உரையாற்றியபோது மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் கூறுகையில், ‘‘ டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, நாட்டுக்கு முக்கியமான நிகழ்வு மற்றும் இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு 135 கோடி இந்தியர்களின் ஆசி உள்ளது.  இந்த வாய்ப்பை பெற்றுள்ள நீங்கள், பிரதமர் கூறியபடி மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் உங்களின் மிகச் சிறப்பான திறனை வெளிப்படுத்த வேண்டும்.  நீங்கள் வலுவாக  இருக்க வேண்டும்.  உங்களின் மன பலம், உங்கள் செயல்பாட்டில் பிரதிபலிக்கும்’’ என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்