முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரிய வழக்கில் ஆகஸ்ட். 5 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது
அதிமுக ஆட்சியில் பால் வளத் துறை அமைச்சரான ராஜேந்திரபாலாஜி 2011 முதல் 13 காலகட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு ஊழல் செய்து அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் ஹேமலதா அமர்வு விசாரித்தது.
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரை ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்து விசாரிக்கும்படி நீதிபதி சத்தியநாராயணனும் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமலதாவும் உத்தரவிட்டனர்.
மாறுபட்ட உத்தரவுகளைப் பிறப்பித்ததால் இவ்வழக்கில் முடிவு காண மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.
அவர் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஊழல் தடுப்பு
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜரானார்.
ராஜேந்திர பாலாஜி சார்பில், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி அவகாசம் கோரியதையடுத்து இறுதி விசாரணை ஆகஸ்ட்., 5 ஆம் தேதியில் நடக்குமென அறிவித்து, விசாரணையை நீதிபதி நிர்மல்குமார் தள்ளி வைத்தார்.
கருத்துகள்