ஜார்கண்டில் 5 ஏகலைவ மாதிரி உறைவிட பள்ளி களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஜார்கண்டில் 5 ஏகலைவ மாதிரி உறைவிட பள்ளி களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா

மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, ஜார்கண்ட் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில்  ஜூலை 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் 5 ஏகலைவ மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

செரய்கலா- கர்சவான், மேற்கு சிங்பம், கிழக்கு சிங்பம் ஆகிய மாவட்டங்களில் இந்த மாதிரி உறைவிடப் பள்ளிகள் அமையவுள்ளன.

இரு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உரையாற்றிய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, பட்டியல் பழங்குடி சமூக மக்களின் மேம்பாட்டிற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வை பற்றியும், இதற்காக அவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள கல்வி பற்றியும் பேசினார். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ஏகலைவ மாதிரி உறைவிடப் பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, 2021-22 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று குறிப்பிட்டார். ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக, தரமான கல்வி இந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சுமார் 480 மாணவர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் கல்வி கற்கவிருப்பதால் இத்திட்டம் பழங்குடி பகுதிகளில் மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதாக திரு அர்ஜூன் முண்டா கூறினார்.‌

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா