மத்திய அமைச்சரவை மாலை 6 மணிக்கு விரிவாக்கம்: 43 பேர் பதவியேற்றனர்

மத்திய அமைச்சரவை மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது: 43 பேர்பதவியேற்றனர் 
மத்திய அமைச்சரவை இன்று மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக மொத்தம் 43 பேர் பதவியேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி


தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் அமைச்சரானார்.

இதுதொடர்பாக கடந்த நாட்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பாஜக நிர்வாகிகளுடன் இறுதிக் கட்ட ஆலோசனை நடத்தினர். அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடுகளும் நடந்த நிகழ்வில்.

பதிய அமைச்சரவையில் 13 பேர் வழக்கறிஞர்கள், ஆறு மருத்துவர்கள், இந்தியக் குடிமைப் பணியிலிருந்த ஏழு பேர், உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி ஏற்கனவே மத்திய இணை அமைச்சர்களாக உள்ள ஏழு பேர் கேபினேட் அமைச்சர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தற்போது உள் துறை இணை அமைச்சராக உள்ள கிஷன் ரெட்டி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் தற்போது 28 காலி இடங்கள் இருக்கிறது. தற்போது அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர்.

மத்திய அமைச்சர்களாக இருக்கும் சிலர் தங்கள் உடல்நிலையை காரணமாக பதவி விலக விரும்பியவர் ராஜினாமா குடியரசு தலைவர் ஏற்றார். புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பாக அவர்கள் பதவி விலகியுள்ளனர்.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனும் ராஜினாமா செய்துள்ளார்.

அவர்கள் நிர்வகித்து வந்த துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதுமட்டுமல்லாமல் சில மத்திய அமைச்சர்கள் மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.குடியரசுத் தலைவர் செயலகம் பிரதமரின் அறிவுரையை ஏற்று, கீழ்காணும் அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக் கொண்டார் 

             1.     திரு டி வி சதானந்த கவுடா

             2.     திரு ரவி சங்கர் பிரசாத்

             3.     திரு தாவர் சந்த் கெலோட்

             4.     திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்'

             5.     டாக்டர் ஹர்ஷ் வர்தன்

             6.     திரு பிரகாஷ் ஜவடேகர்

             7.     திரு சந்தோஷ் குமார் கங்குவார்

             8.     திரு பாபுல் சுப்ரியோ

             9.     திரு தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ்

           10.    திரு ரத்தன்லால் கட்டாரியா

           11.    திரு பிரதாப் சந்திர சாரங்கி

           12.    சுஷ்ரி தேபஶ்ரீ சௌந்தர்                       

இது குடியரசுத் தலைவர் செயலகம் தகவல

மொத்தம் 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் பலர் புதுமுகங்களாகும்.  இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் 4 பேர், முன்னாள் மாநில அமைச்சர்கள் 18 பேர், வழக்கறிஞர்கள் 13 பேர், மருத்துவர்கள் 6 பேர், இன்ஜினியர்கள் 5 பேர், முன்னாள் அரசு அதிகாரிகள் 7 பேர் இடம் பெற்றுள்ளார்கள். அதன் விபரம்:

புதிய அமைச்சர்களின் பட்டியலாகும்.

தமிழ்நாட்டின் எல். முருகனை அமைச்சராக்கியதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சொல்லும் செய்தி தெளிவானது.  இது நாள் வரை அதிகாரம் கிடைக்காத சமூகங்களுக்கு பதவிகளைத் தருவதன் மூலமும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமும் பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கியை உறுதி செய்வது ஒரு முதன்மை உத்தி.  0.பன்னீர் செல்வத்தின் மகனுக்கு பதவியை மறுத்திருப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு சிறந்த செய்தி சொல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 

பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன், வி.பி. துரைசாமி ஆகியோருக்கு கட்சி, ஆட்சிகளில் பொறுப்பு தருவதன் மூலம் தனது இலக்கை நோக்கி பிஜேபி மெல்ல முன்னேறுவதைப் போன்றே தோன்றுகிறது.  இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அவர்கள் செய்த இந்த உத்தி கை கொடுத்திருக்கிறது. 
இன்னமும் சமூக நீதியை கொள்கை அளவில் மட்டுமே பேசிக்கொண்டு, அதிகாரத்தை பகிர்ந்தளிக்காமல் ஆற்றிக் கொண்டிருந்தால் நிலைமை ஒரு நாள் எல்லை மீறிப் போக வாய்ப்பு இருக்கிறது. 

அருந்ததியர் இட ஒதுக்கீடு பற்றி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் எல். முருகன் அமைச்சராகி இருக்கிறார். அதிமுகவை எம் ஜி ஆர் உருவாக்கி அதில் அதிக அளவில் சேர்த்த மக்கள் மதுரை வீரன் படம் பார்த்த கொங்கு மக்களின் ஒரு பிரிவானவர்கள் அவர்களே அப்போது அதிமுக ஆட்சியில் அமர மேற்கு மாகாணத்தில் காரணமாக அமைந்தவர்கள் அதே பாணியில் எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா