சர்வதேச போட்டித்திறன் மிக்க உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிப்பதற்காக 6 தொழில்நுட்ப தளங்கள் தொடக்கம்

கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம் சர்வதேச போட்டித்திறன் மிக்க உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிப்பதற்காக 6 தொழில்நுட்ப தளங்கள் தொடக்கம்


இந்தியாவில் சர்வதேச போட்டித்திறன் மிக்க உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தக்கூடிய 6 தொழில்நுட்ப புதுமை தளங்களை மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று தொடங்கி வைத்தார்.

75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது நாட்டுக்குக் கிடைத்த பரிசாக இந்த தளங்கள் அமைந்துள்ளன என்றும், இந்தியாவின் அனைத்து தொழில்நுட்ப வளங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்துறைகளை ஒரே தளத்தில் கொண்டு வந்து, இந்திய தொழில்துறை எதிர்கொண்டு வரும் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உருவாக்க இவை உதவும் என்றும் திரு ஜவடேகர் கூறினார்.


தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் சர்வதேச போட்டித்திறன் மிக்க உற்பத்தி துறை ஆகிய லட்சியங்களை அடைய உதவும் விதத்தில் முக்கிய தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்க இந்த தளங்கள் உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐஐடி சென்னை, மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம், சர்வதேச வாகன தொழில்நுட்ப மையம், இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம், பெல் மற்றும் எச்எம்டி ஆகியவை ஐஐஎஸ்சி பெங்களூருவுடன் இணைந்து இந்த ஆறு தளங்களை உருவாக்கியுள்ளன.

ஆறு தொழில்நுட்ப தளங்களில் பதிவு செய்து கொள்வதற்கான இணைப்புகள் பின்வருமாறு:

a.       https://aspire.icat.in

b.       https://sanrachna.bhel.in/

c.       https://technovuus.araiindia.com/

d.       https://techport.hmtmachinetools.com

e.       https://kite.iitm.ac.in/

f.        https://drishti.cmti.res.in/


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா