மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.65.75 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலை சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாருக்குதொடர்புடைய ரூ.65.75 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலை சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில்,2007 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில்,கடன் வழங்கியது உள்ளிட்ட விஷயங்களில்,ரூ.1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கடந்த 2019-ஆம் ஆண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர் இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும்,துணை முதல்வருமான அஜித் பவார்,அவரது மனைவி உள்ளிட்டோர் மீது  அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.                      அஜித் அனந்த்ராவ் பவார், மகாராஷ்டிராவின் தற்போதைய துணை முதல்வர்
பாரமதி தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டமன்றத்துத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகனாவார். இவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இருப்பதுடன், மகாராஷ்டிராவின் நிதியமைச்சராகவும் உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா