உர உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்குவது குறித்து மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு கூட்டம்
இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் உர உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்குவது குறித்து மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு கூட்டம்
உர உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்குவது குறித்து ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில் இத்துறையின் இணையமைச்சர் திரு பகவன்த் குபா, உரத்துறை செயலாளர் திரு ஆர்.கே.சதுர்வேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
ராமகுண்டம் ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து, நாட்டில் ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யப்படுகிறது. இது யூரியா உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்கும் பிரதமரின் கனவை நனவாக்க உதவும். இத்திட்டம் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை அதிகரிப்பதோடு, சாலைகள், ரயில் பாதைகள், துணை தொழிற்சாலைகள் போன்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவது உட்பட நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்குவிப்பை அளிக்கும். அதோடு நாட்டின் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
மாற்று உரங்கள் பயன்பாட்டை அதிகரிக்க சந்தை வளர்ச்சி உதவி (எம்டிஏ) கொள்கையை தாராளமயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நகரங்களில் உள்ள குப்பைகளுக்கு மட்டுமே எம்டிஏ கொள்கை முன்பு இருந்தது.
உயிரிஎரிவாயு, பசுமை உரம், கிராமங்களில் உள்ள ஆர்கானிக் உரம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் எம்டிஏ கொள்கையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நீட்டிப்பு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்யும். துர்காபூரில் உள்ள மேட்டிக்ஸ் உரங்கள் ஆலை 12.7 லட்சம் மெட்ரிக் டன் திறனுடையது. இது விரைவில் உற்பத்தியை தொடங்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பேசினார்.
கருத்துகள்