மதுரையில் பணத்திற்கு குழந்தை விற்ற வழக்கில் தலைமறைவான இருவரும் கைது

மதுரையில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி பணத்திற்கு குழந்தை விற்ற வழக்கில் தலைமறைவான இதயம் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் (வயது 40) உதவியாளர் மதர்ஷா(வயது 36)ஆகியோர் கேரளாவிற்கு காரில் தப்பிச் செல்லும் வழியில் தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரத்தில் கைது செய்யப்பட்டனர். மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வந்தவர்கள் தலைமறைவாயினர்.
அவர்கள் சிவக்குமாரின் பச்சை நிற 'நிசான்' காரில் (டி.என்.01 ஏ.எஸ். 3810) தப்புவதாக காவல்துறையிருக்குத் தகவல் கிடைத்தது குறித்து அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் தெரிவிக்கப் பட்டதில்.  போடிநாயக்கனூர் மெட்டு செக்போஸ்ட் வழியாக சென்றபோது அவர்களை காவல்துறை கைது செய்தனர். போடிநாயக்கனூர் தாலுகா காவல் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மதுரை அழைத்து வரப்பட்டவர்கள். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா