ஜைசல்மரில் மூங்கில் சோலை திட்டம்: காதி கிராம தொழில் ஆணையம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தொடக்கம்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்   ஜைசல்மரில் மூங்கில் சோலை திட்டம்: காதி கிராம தொழில் ஆணையம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தொடக்கம்


பாலைவனமாவதை தடுக்கவும் மற்றும் ஊரக பொருளாதாரத்துக்கு உதவவும் ஜைசல்மரில் மூங்கில் சோலை திட்டத்தை (BOLD (Bamboo Oasis on Lands in Drought) காதி கிராம தொழில் ஆணையம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை நேற்று தொடங்கியது.

ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் பசுமையை ஏற்படுத்தும்  முதல் முயற்சியாக, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம், எல்லை பாதுகாப்பு படையினருடன் (பிஎஸ்எப்)  இணைந்து ஜைசல்மரின் தனோத் கிராமத்தில் 1000 மூங்கில் கன்றுகளை நேற்று நட்டது.  இந்த திட்டத்தை காதி கிராம தொழில் ஆணையத்தின் தலைவர், திரு வினய் குமார் சக்சேனா, பிஎஸ்எப்-ன் மேற்கு கட்டுப்பாட்டு மைய சிறப்பு தலைமை இயக்குனர் திரு சுரேந்திர பன்வார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். 

வறண்ட நிலத்தில் மூங்கில் சோலை அமைக்கும் (போல்ட்) திட்டம், நிலம் பாலைவனமாவதை குறைக்கும், உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் மற்றும் பலநோக்கு ஊரக தொழிலுக்கும் உதவியாக இருக்கும். 

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் லாங்கேவாலா நிலைக்கு அருகே தனோத் மாதா கோயில் உள்ளது. இதன் அருகேயுள்ள 2.50 லட்சம் சதுர அடி கிராம பஞ்சாயத்து நிலத்தில் மூங்கில்  கன்றுகள் நடப்பட்டன.  தனோத் கிராமம்  ஜைசல்மர் நகரில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது. இது ராஜஸ்தானில் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.  சுற்றுலா பயணிகளை கவர,  இங்கு மூங்கிலை வளர்த்து பசுமையை உருவாக்க காதி கிராம தொழில் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த மூங்கில் கன்றுகளை வளர்க்கும் பொறுப்பு எல்லை பாதுகாப்பை படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வறண்ட நிலைத்தில் மூங்கில் சோலை திட்டம், ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள நிக்லா மண்ட்வா கிராமத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கப்பட்டது. அப்போது 25 பிகா நிலத்தில் 5000 சிறப்பு வகை மூங்கில் கன்றுகள் நடப்பட்டன. நாட்டில் நிலம் தரிசாவதையும், பாலைவனமாவதையும் தடுக்க பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

அதன்படி விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை கொண்டாட,  காதி மூங்கில் திருவிழாவை காதி கிராம தொழில் ஆணையம் தொடங்கியுள்ளது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா