இந்தியாவை மருத்துவ மற்றும் சுகாதார சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்

சுற்றுலா அமைச்சகம் இந்தியாவை மருத்துவ மற்றும் சுகாதார சுற்றுலாத் தலமாக மாற்ற அரசு நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவை மருத்துவ மற்றும் சுகாதார சுற்றுலாத் தலமாக மாற்ற மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

ஆயுஷ் மருத்துவ / சுகாதார சுற்றுலாவை மேம்படுத்த தேசிய மருத்துவ மற்றும் சுகாதார சுற்றுலா வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் சுகாதார சுற்றுலாவுக்கு தேசிய வரைவு யுக்தி மற்றும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

166 நாடுகளுக்கு இ-மருத்துவ விசா அறிமுகப்படுத்தப்பட்டது.

மருத்துவ / சுகாதார சுற்றுலா சேவைகளை வழங்குபவர்களுக்கு சந்தை மேம்பாட்டு உதவி திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுகின்றன.

லண்டனில் உள்ள உலக சுற்றுலா மார்ட், பெர்லினில் உள்ள ஐடிபி, அரேபியன் டிராவ் மார்ட் போன்ற இடங்களில் மருத்துவ மற்றும் சுகாதார சுற்றுலா குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்தியாவை மருத்துவ மற்றும் சுகாதார சுற்றுலாத் தலமாக உருவாக்க சுற்றலாத்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் சுற்றுலா:

சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் சுற்றுலாவை, சுற்றுலாத்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.

நாட்டில் சுற்றுலா தொடர்பான கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த சுவதேஷ் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

பாதுகாப்பான சுற்றுலாவுக்கு, நடத்தை விதிமுறைகளை சுற்றுலா சேவை அளிப்பவர்கள் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசித்து உருவாக்க சுவதேச தர்ஷன் கீழான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் - சுற்றுலாவை, சுற்றுலாத்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் பொறுப்பு. இதற்கான வசதிகளை ஏற்படுத்த சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை அமைச்சகம் நிதியுதவி வழங்கும்.

சுற்றுசூழல் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை பராமரிக்க சுற்றுலாத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. சுற்றுலாத்துறைக்கு தங்குமிடங்கள், சுற்றுலா நடத்துபவர்கள், கடற்கரைகள், உப்பங்கழிகள், ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்ற நிலையான சுற்றுலா அளவுகோல்களை சுற்றுலாத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்