ஹைட்டி நாட்டு அதிபர் ஜோவெனல் மோஸ் படுகொலைக்கு பிரதமர் இரங்கல்

பிரதமர் அலுவலகம் அதிபர் ஜோவெனல் மோஸின் படுகொலைக்கு பிரதமர் இரங்கல்ஹைட்டி நாட்டு அதிபர் திரு ஜோவெனல் மோஸ் படுகொலை செய்யப்பட்டதற்கும் , முதல் பெண்மணி திருமதி மார்ட்டின் மோஸ் மீதான தாக்குதலுக்கும், பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், "ஹைட்டி நாட்டு அதிபர் திரு ஜோவெனல் மோஸின் படுகொலையையும், ஹைட்டியின் முதல் பெண்மணி மார்ட்டின் மோஸ் மீதான தாக்குதலையும் அறிந்து வருத்தமடைந்தேன். அதிபர் திரு மோஸின் குடும்பத்திற்கும், ஹைட்டி மக்களுக்கும் எனது இரங்கல்கள்" என்று கூறியுள்ளார்.                      ஹைட்டி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோஸ் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதிபரின் மனைவி படுகாயமடைந்துள்ளார்

தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரிலுள்ள வீட்டில் தங்கியிருந்த போதே இனம் தெரியாத ஆயுததாரிகளால் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணியளவில் (05:00 GMT) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

என்ற தகவலை ஹைட்டி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். அவரை கொலை செய்தது வெளிநாட்டவர் என்றும், அவர்கள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.  முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான ஹெய்தி வரலாற்று ரீதியாக பல சிறப்பம்சங்களைக் கொண்டதாகும். முதலாவது கருப்பின குடியரசு முழுவதுமாக அடிமைகளின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட முதலாவது நாடுமாகும். டூசான் லூவர்சூர் என்ற புரட்சியாளரினால் ஹெய்தியப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இது இலத்தீன் அமெரிக்காவில் விடுதலையை அறிவித்த முதலாவது நாடாகும். ஜனவரி 1, 1804 ஆம் ஆண்டில் விடுதலையானது

லெஸ் தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான இஸ்பனியோலாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கரிபியன் நாடுகளில் கியூபா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றிற்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய நாடாகும். இது தனது 360 கிமீ எல்லையை டொமினிக்கன் குடியரசுடன் பகிருகிறது. ஹெய்தி பல சிறு தீவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

13 ஜனவரி 2010 அன்று ஹெய்தியில் உள்ளூர் நேரம் 16:53 (21:53 கிரீன்விச்) நிகழ்ந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டரில் அளவிடப்பட்டுள்ளதில் இலட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

7 அக்டோபர் 2018 ல் ஹெய்தியில் உள்ளூர் நேரம் 19:11 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 548 பேர் காயமுற்றனர். 2,102 வீடுகள் அழிந்தன, மேலும் 15,932 வீடுகள் சேதமடைந்தன. ஹைத்தி எரிமலைகளால் இயற்கை அமைப்பு மாற்றம் மூலம் உருவான நாடாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா