அழி கண்மாயில் மீன் பிடித்த நபர் தொண்டையில் உயிர் மீன் சிக்கியதால் உயிரிழப்பு.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகில் தொண்டைக்குள் உயிர் மீன் சிக்கி ஒருவர் உயிரிழப்பு. ஊர் கண்மாய் நீர் அழிந்து ஊர் கூடி பிடித்த ஒரு மீனை வாயில் வைத்து மறு மீன் பிடித்த போது  சோகம்.மாங்கொம்பு கிராமத்தைச் இளையராஜா, குன்றக்குடிக் கண்மாய் அழிவு காரணமாக மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது பிடித்த மீனை வாயில் வைத்துக்கொண்டு, மற்றொரு மீனைப் பிடிக்க முயன்றபோது அந்த மீன் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதால் மூச்சுவிட முடியாமல் திணறியதால், அருகிலிருந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், மூச்சுத்திணறலால்  வழியிலேயே  உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி பெரிய கண்மாயில் கீழசிவல்பட்டி அருகில் உள்ள மாங்கொம்பைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் இளையராஜா (வயது 30) இரண்டு வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் பணிசெய்து திரும்பி  சொந்த ஊரிலேயே வாடகை சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார் நேற்று இவரது மைத்துனருடன் குன்றக்குடி கண்மாயில் மீன் பிடிக்கும் போது கையில் கிடைத்த ஒரு மீனை பிடித்து வாயில் வைத்துக் கொண்டு அடுத்த மீனை பிடிக்க முயலும் போது எதிர்பாராத விதமாக இளையராஜா வாயினுள் மீன் உள்ளே சென்றதால் தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு மயங்கி கண்மாய்த் தண்ணீரில் விழுவதைப் பார்த்த அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதனை செய்த காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகதீ தெரிவித்தனர் மீன் பிடிக்க வந்து மீனை விழுங்கி இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியிலும், மாங்கொம்பு கிராமத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா