பொது இடங்களில் மரம் நடுவதற்கு வனத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் 


அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவது மற்றும் மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து பசுமை கமிட்டி தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் மரம் நடுவதற்கும் அதை முறைப்படுத்தவும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.       
        அனைத்து உயிரினங்கள் வாழ்வதற்கும், வளர்வதற்கும் ஆரோக்கியமான கண்சுற்றுச்சூழல் அவசியமானதாகும். ஒரு மாநிலத்தின் நீடித்த முன்னேற்றமானது பொருளாதார வளர்ச்சி சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் என்ற மூன்றின் அடிப்படையில் அமையும். இயற்கை ஆதாரங்களின் மீதான அதிக நெருக்கடியால் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது ஒரு மிகப் பெரிய சவாலாக உள்ளது. மனித இனத்தின் செயல்பாடுகளால் நீடித்த வாழ்க்கை முறையில் வளர்ந்து வரும் நெருக்கடியான உலகம் வெப்பமயமாதல், சூழல் மாசடைதல், சுத்தமான நீர் தட்டுப்பாடு மற்றும் உயிரின அழிவு போன்றவற்றை குறைக்க தேவையான நடவடிக்கை அவசியமாகிறது.

மனிதனின் எதிர்காலம் தாவரம், விலங்குகள் மற்றும் உயிர் சூழல் அமைப்பு ஆகியவற்றோடு தவிர்க்க இயலாக நிலையில் இணைந்துள்ளது.

எனவே சூழலியல் சமன்பெற நிலம், நீர், காடுகள் மற்றும் பல்லுயிரினப் பெருக்கம் ஆகியவற்றை பாதுகாத்து மேம்படுத்துதல் அவசியமாகும். சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக நதிநீர் மற்றும் ஏரிகளில் மாசு தடுப்பு, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை பெருமளவில் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

வனங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சூழலியல் பாதுகாப்பு, நீர் மற்றும் உணவு பாதுகாப்பு போன்றவற்றை வழங்குவதுடன், வனத்தையொட்டி வாழும் மக்களுக்கு தேவையான வாழ்வாதார பாதுகாப்பினையும் வழங்குகிறது. வனங்களிலுள்ள மருத்துவ தாவரங்கள், பாரம்பரிய மருத்துவ முறைகளை சார்ந்து வாழும் பல லட்சம் மக்களுக்கு சுகாதாரப்பாதுகாப்பினை அளிக்கிறது. உயிரின புவி வேதியியல் சுழற்சியில், குறிப்பாக கரிம மற்றும் நீர் சுழற்சியில் வனம் முக்கிய பங்கு வகிக்கிறது. கரியமில வாயுவினை உறிஞ்சம் ஆற்றலுடைய வனங்கள், தட்பவெப்ப மாறதலை தடுப்பதில் முக்கியத்துவம் பெற்று, மனித இனம் உயிர் வாழ நேரடி பங்காற்றுகிறது.

வளமான காடுகளைக் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் கடற்கரை பிரதேசங்களை தமிழ்நாடு இயற்கையாகப் பெற்றுள்ளது. குறும் பரப்பு உயிரினங்கள் நிறைந்த பெரு மையமாகவும், உலகில் உயிரிப்பன்மை மிகுந்த 25 பேரிடங்களுள் ஒன்றாகவும் திகழும் மேற்கு தொடர்ச்சி மலை, தமிழகத்தில் பெரிய அளவில் வியப்பித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்குள் மிகவும் அதிகமாக பூக்கும் தாவரங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் விளங்குவதால், நாட்டின் இந்த வனத்தினைப் பாதுகாக்கும் பொறுப்பு அதற்கு உள்ளது. தமிழக வனங்கள் பெருமளவில் மருத்துவ குணங்களைக் கொண்ட தாவரங்களையும், வனம் சார்ந்து பயிரிடப்படும் தாவர வகைகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளதால் அவற்றைப் பாதுகாப்பது முக்கியத்துவம் பெறுகின்றது. மேற்கு தொடர்ச்சி மலையினை சார்ந்த 14 வகையான குறும்பரப்புக்கு உரித்தான பாலூட்டி இனங்களும், தீபகற்ப இந்திய பகுதியிலுள்ள 5 வகையான குரங்கினங்களும் தமிழகத்தில் உள்ளன. மேலும், தமிழகத்தில தேசிய பாரம்பரிய விலங்குகளான யானை மற்றும் புலி ஆகியன குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. அவற்றின் எண்ணிக்கையும் தற்போது பெருகி வருகிறது. என்பது அரசின் கொள்கை திட்டமாக தற்போது அரசாணை வெளியீடு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா