புவி வெப்பம் தொடர்பான வளிமண்டல அளவுருக்கள் காரணமாக, வட இந்திய பெருங்கடல் பகுதியில் சூறாவளிப் புயல்கள் தீவிரம் அதிகரிக்கிறது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புவி வெப்பம் தொடர்பான வளிமண்டல அளவுருக்கள் காரணமாக, வட இந்திய பெருங்கடல் பகுதியில் சூறாவளிப் புயல்கள் தீவிரம் அதிகரிக்கிறது


கடந்த 40 ஆண்டு காலமாக, வடஇந்திய பெருங்கடல் பகுதியில் சூறாவளிப் புயல்களின் தீவிரம் அதிகரித்து வருவதாக, இந்திய விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. சமூக பொருளாதார பாதிப்புகளுடன் கூடிய இந்த அதிகரிப்புக்கு, அதிக ஈரப்பதம், குறிப்பாக வளிமண்டலத்தில்,  பலவீனமான செங்குத்து காற்று, மற்றும் சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை போன்ற வளிமண்டல அளவுருக்கள்தான் காரணம். இது,  சூறாவளியை அதிகரிக்கும் போக்கை கொண்டு வருவதில் புவி வெப்பமயமாக்கலின் பங்கை குறிக்கிறது.

புவிவெப்பமயமாவதன் காரணமாக, உலக கடற்பரப்புகளில், சூறாவளியின் தீவிரம் அடிக்கடி அதிகரிப்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. வடஇந்திய பெருங்கடல்பகுதியில், அதி தீவிர புயல்கள் அடிக்கடி உருவாவது, கடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஆபத்து மற்றும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பருவநிலை மாற்ற திட்டத்தின் கீழ், வட இந்தியப் பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளி செயல்பாட்டில் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் ஓட்டம் மற்றும் எல் நினோ-தெற்கு அலைவு (ENSO) ஆகியவற்றில் முக்கியமான வளிமண்டல அளவுருக்களின் பங்கு மற்றும் செல்வாக்கு குறித்து  காரக்பூர் ஐஐடி கடல் பொறியில் துறை மற்றும் கடற்படை கட்டிடக்கலை விஞ்ஞானிகள் ஜியா ஆல்பர்ட், அதிரா கிருஷ்ணன் மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோர் வேலூர் விஐடி பல்கலைக்கழக பேரிடர் மேலாண்மை மையத்தின் கே.எஸ்.சிங் மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.  ஆற்றல் சிதைத்தல் குறியீடு (Power Dissipation Index ) என்றழைக்கப்படும் வெப்பமண்டல சூறாவளிகளின் அழிவு ஆற்றலுக்கான அளவுகோலுடன்,  கணிசமான தொடர்பை நிரூபித்த இந்த ஆராய்ச்சி சமீபத்தில் ‘கிளைமேட் டைனமிக்ஸ்’ என்ற தலைப்பில்  ஸ்பிரிங்கர்  என்ற இதழில் வெளியிடப்பட்டது.  குறிப்பாக, இந்த வெப்ப மண்டல சூறாவளிகள், பருவமழைக்கு முந்தைய காலத்தில் ஏற்படும் போக்கு அதிகரித்துள்ளது.

2000ம் ஆண்டுக்கு பின்பு வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிகள் அதிகரிக்கும் போக்கு காணப்பட்டது.

வலுவான நடுத்தர அளவிலான  ஈரப்பதம் , நேர்மறையான குறைந்த அளவிலான  சுழல்நிலை , பலவீனமான செங்குத்து காற்று , சூடான கடல் மேற்பரப்பு வெப்பநிலை  மற்றும் அடக்கப்பட்ட வெளிச்செல்லும் நீண்ட அலை கதிர்வீச்சு  ஆகியவை வட இந்தியப் பெருங்கடலில் அதிகரித்த வெப்பமண்டல சூறாவளி அதிகரித்ததற்கு காரணம் என இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் புதிய கண்டுபிடிப்புகள், வட இந்திய பெருங்கடல் பகுதியில் வெப்பமண்டல சூறாவளிகளின் செயல்பாட்டில் மேம்பட்ட ஆராய்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா