இலஞ்ச ஒழிப்பு துறையினரை முடமாக்கிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது.

இலஞ்சம் வாங்கும் அரசு பணியாளர்களுக்கு  எச்சரிக்கை 

இலஞ்ச ஒழிப்பு துறையினரை முடமாக்கிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது.


இலஞ்சம் வாங்கும் அரசு பணியாளர்களில் உயர் அதிகாரிகளைக் காக்கும் பொருட்டு போடப்பட்ட அரசாணை நிலை எண் : 10. ஐ ரத்து செய்தது. 

தமிழக அரசுக்கு மீண்டும்  உயர்நீதிமன்றம் கண்டனம்

அரசியலமைப்பு சாசன கோட்பாடு 14 ன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம்  என்பதை உறுதி படுத்தி உள்ளது.

ஆனால், இலஞ்சம் வாங்கும் ஐ .ஏ.எஸ்,  ஐ.பி.எஸ்  போன்ற உயர் பொறுப்பிலுள்ளவர்கள் மீது, யாரேனும் இலஞ்சப் புகார் கொடுத்தால் உடனடியாக அவர்களைக் கைது செய்ய இலஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட வில்லை.

அரசிடம் அனுமதி பெற வேண்டுமென்று அரசாணை போட்டிருந்த கடந்த அரசு

இது அரசியலமைப்புச்  சட்டத்திற்கு விரோதமானதாகும்

எனவே,  இதுகுறித்து வழக்குரைஞர்  புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத்  தாக்கல் செய்தார் வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இந்தப் பாகுபாடு  ஏன்  எனக் கேள்வி எழுப்பியது

என்ன ஆச்சரியம்! 

அரசுத் துறை சார்ந்த. எந்த ஊழியர்  மீதும் இலஞ்சப் புகார் வந்தாலும்  லஞ்ச ஒழிப்பு  துறையினர் அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய அரசாணையை மிகவும் அவசர கதியில் முந்தைய  அரசு வெளியிட்டது ..

இலஞ்ச ஒழிப்புத் துறையினரை முற்றிலும் முடமாக்கிய. புதிய அரசாணையை ரத்து செய்யக் கோரி  புகழேந்தி மேல் முறையீடும்  செய்தார்

மேல்முறையீட்டினை  விசாரித்த உயர்நீதிமன்றம்  மக்கள் விரோத அரசாணையை ரத்து செய்தது.

இனி மேல் இலஞ்சம் வாங்கும்  ஊழியர்கள் உயர் பதவிகளில் இருந்தாலும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப் படுவார்கள்.

இலஞ்சம் கேட்டாலும்  லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் ஆதாரத்துடன் புகார் செய்து அவர்களை சிறைக்கு அனுப்புவார்கள்.

இந்த உத்தரவினை பெற்று தந்த மக்கள் சிவில் உரிமை கழக  வழக்குரைஞர்  புகழேந்தியை "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் சார்பிலும்  "இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு " சார்பிலும்  வாழ்த்தினார்கள்.

தகுந்த ஆலோசனைகளுக்கும்,  வழிகாட்டுதல்களுக்கும். துறை உதவி தேவை.

இலஞ்சம் ஊழல் இல்லா சமுதாயம் காண்பதில்

அரசியலமைப்புச் சாசன கோட்பாடு 19 (1)  அ மற்றும் 51 (A)  ஒ வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுகிறது பப்ளிக் ஜஸ்டிஸ்.

"இலஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா