பெகாசஸ் விவகாரத்தில்.. பிரதமரை விசாரிக்க வேண்டுமெனவும் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமெனவும். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தலும் அரசின் விளக்கமும்

பெகாசஸ் விவகாரத்தில்.. பிரதமரை விசாரிக்க வேண்டுமெனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டுமெனவும். காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்பெகாசஸ் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அதன் முழு விபரம் பார்ப்போம்:

இஸ்ரேல் என்எஸ்ஓ குரூப்  நிறுவனம் பெகாசஸ் எனும் ஸ்பைவேரை உருவாக்கியதைக் கொண்டு ஒருவரது மொபைலை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியும்.

 பெகாசஸ் மூலம் ஒருவர் யாருடன் பேசுகிறார், என்ன பேசுகிறார், எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருதார். எங்குச் செல்கிறாரென அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் கேமரா, மைக் போன்றவற்றைக் கூட இயக்க முடியும்.

 பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி உலகெங்கும் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலரது மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தி கார்டியன், வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட 16 ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அரசியல் சாணக்கியர் பாஜகவின் மூத்த தலைவர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி  வெளியிடுகிறார்? கடந்த காலத்தில் 

அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சியை கவிழ்ப்பு செய்த 1999 ஆம் ஆண்டு அரசியல் நிகழ்வுகள் பொருந்திப் பார்க்க வேண்டிய நிலையில்

இப்போது நரேந்திரமோடி அரசின் காலை வாரக் காரணமும் பின்னணி என்ன?

ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பல துணை அமைப்புகளில் பாஜக அரசியல் களத்தில் வரும் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மற்றொரு பிரிவான வீராட் ஹிந்து சங்கத்தின் தலைவர் நிர்வாகி பிரதமர் நரேந்திரமோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணியை  உருவாக்கி இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்து தனக்கான கொள்கை தொடர்பான அனைத்தையும் சாதித்து வரும் நிலையில் தற்போதைய நிலை பாஜகவின் அமைப்பு சார்ந்த கொள்கைப் படி யார் ஒருவரும் தொடர்ச்சியாக இருமுறை மட்டுமே தலைமைப் பதவியை பெறமுடியும்  2024 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி தருமா அல்லது தராதா என்பது தெரிந்த பின் இவர்களை ஒரு அழுத்தம் காரணமாக வெளியேற்ற அதன் தலைமை முயல்கிறதா? என்பதே இப்போதைய அரசியல் அறிந்த பத்திரிகையாளர்கள் பார்வை இந்தியாவிலும் காங்கிரஸின் அடுத்த ஆட்சிக்கு தயாராக ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகராக  ஐ-பேக் நிறுவனங்கள் சார்பில் களம் காணும் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள், 40 செய்தியாளர்கள் உட்பட செல்போன் உளவு பார்க்கப்பட்டதாகச் செய்தி வெளியானது. 

காங்கிரஸ் கட்சியின்  குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலும் மறுத்துள்ள நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் "ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஹேக் செய்து உளவு பார்க்கும் பணிகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளனர் என்றும்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன் 40 க்கும் மேற்பட்டவர்களின் சொல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், விசாரணை தொடங்குவதற்கு முன்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா  அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும். அதேபோல பிரதமர் மோடியிடம் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்"எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசுகையில், "டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார், ஆனால் கண்காணிப்பு இந்தியாவாக அது எப்படி மாறியுள்ளது என்பதையே நாம் பார்க்கிறோம். என்எஸ்ஓ நிறுவனம் இந்த ஸ்பைவேரை பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட அரசமைப்புகளால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறது. ஆனால் இங்கு மோடிக்கு எதிராகப் பேசும் நபர்களைக் குறி வைத்துப் பயன்படுத்துகின்றது.             நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் பெகாசஸ் குறித்து கேள்வி எழுப்பியது" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று நாடாளுமன்றத்தில் ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சட்ட விரோதமான முறையில் நாட்டில் யாரையும் உளவு பார்க்கவில்லை என விளக்கமளித்திருந்தார். இருப்பினும், இது தேச பாதுகாப்பு தொடர்பானதென்பதால் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், இனி வரும் நாட்களில் பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் முக்கியமானதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

2021 ஜூலை 18 ஆம் தேதி அன்று வெளியான ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்த பெகாசஸ் உளவு விவகாரம் குறித்த அறிக்கை

பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைப்பேசிகள் வேவு பார்க்கப்படுவதாக 2021 ஜூலை 18 அன்று வெளியான ஊடக செய்திகள் குறித்து கீழ்காணும் அறிக்கையை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று வழங்கினார்.

“மாண்புமிகு மக்களவை தலைவர் அவர்களே,

பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து நான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

மிகவும் பரபரப்பான செய்தி ஒன்று இணையதளம் ஒன்றில் நேற்றிரவு வெளியிடப்பட்டது.

அந்த செய்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் போகிற போக்கில் வைக்கப்பட்டிருந்தன.

கூட்டமைப்பு ஒன்றுக்கு 50,000 தொலைபேசி எண்களுடன் கூடிய தரவுதளத்துக்கான அணுகல் கிடைத்திருப்பதே இச்செய்திக்கான அடிப்படை. இந்த தொலைப்பேசி எண்களுடன் தொடர்புடைய நபர்கள் உளவு பார்க்கப்படுகிறார்கள் என்பதே குற்றச்சாட்டு ஆகும். அதே சமயம், கீழ்கண்டவாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது: 

“தரவில் இருந்த எண்ணுக்கான தொலைப்பேசி பெகாசஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா என்று தெரிவிக்கப்படவில்லை.

ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா அல்லது வேவு பார்க்கப்பட்டதா என்பதை தொலைப்பேசியை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தாமல் கூறமுடியாது.”

எனவே, தரவில் எண் இருக்கும் காரணத்தாலேயே வேவு பார்க்கப்பட்டதாக பொருள் கிடையாது என்று அந்த செய்தியே கூறுகிறது.

தேசிய பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பின் காரணமாக, மத்திய மற்றும் மாநில முகமைகளால் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கு நன்கு நிறுவப்பட்ட முறை இந்தியாவில் உள்ளது. இந்திய தந்தி சட்டம், 1885-ன் பிரிவு 5(2) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2020-ன் 69-ம் பிரிவின் கீழ் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கான வேண்டுகோள்கள் வைக்கப்பட வேண்டும்.

மாண்புமிகு மக்களவை தலைவர் அவர்களே,

நிறைவாக நான் கூற விரும்புவது என்னவென்றால்:

பட்டியலில் உள்ள எண்கள் வேவுபார்க்கப்பட்டனவா என்பது கூற இயலாது என்று செய்தியை வெளியிட்டவர் கூறுகிறார்.

வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.

சட்டப்பூர்வமில்லா வேவுபார்த்தல் நடைபெறாமல் இருப்பதை நமது நாட்டின் நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் உறுதி செய்கின்றன.

மாண்புமிகு மக்களவை தலைவர் அவர்களே,

இந்த விஷயத்தை தர்க்க கண்ணோட்டத்தோடு நாம் அணுகினால், இந்த பரபரப்பில் உண்மை இல்லை என்பது நன்கு புலப்படும்

நன்றி, மாண்புமிகு மக்களவை தலைவர் அவர்களே.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்