மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக திரு அனுராக் தாகூரும் இணை அமைச்சராக எல்.முருகனும் பொறுப்பேற்பு

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக திரு அனுராக் தாகூர் பொறுப்பேற்பு
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக திரு அனுராக் தாகூர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வது தமது பொறுப்பு என்றும் கூறினார். பிரதமர் தமக்கு அளித்துள்ள பொறுப்புகளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் இதற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திரு தாகூர் கேட்டுக்கொண்டார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அமித் காரே, அமைச்சருக்கு அவரது அறையில் வரவேற்பு அளித்தார். பல்வேறு ஊடகப் பிரிவுகள் மற்றும் பிரசார் பாரதியின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், அனைத்து ஊடகங்களின் தலைவர்களுடன் குழுவாக இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர். எல். முருகன் பொறுப்பேற்பு

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர் எல்.முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் முன்னிலையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

அதன்பின் பேட்டியளித்த டாக்டர். முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். தனது கடமைகளை உண்மையுடன் மேற்கொள்வேன் என அவர் மேலும் கூறினார். மத்திய அமைச்சரவையில், தமிழக மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கியதற்காக பிரதமருக்கு மத்திய இணையமைச்சர் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா