கர்நாடக மாநில பாஜக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.

 கர்நாடக மாநில பாஜக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய எடியூரப்பா, தன்னை ராஜினாமா செய்யும்படி யாரும் நிர்ப்பந்திக்கவில்லை யென்றும், தானாகவே ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்திருந்திருந்த நிலையில் அடுத்த கர்நாடகா முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவராவார் 1960 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் தேதி பிறந்த பசவராஜ் பொம்மை. 2008 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். இவரது வளர்ச்சி மிக வேகமாக இருந்தது. பசவராஜ்​ பொம்மை இருமுறை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஜனதா பரிவார் இயக்கத்திலிருந்து வந்த பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்ஆர் பொம்மை 1988 ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஆளுநர் வெங்கடசுப்பையா அந்த அரசைக் கலைத்தார். இதை எதிர்த்து எஸ்ஆர் பொம்மை உச்ச நீதிமன்றத்தை அணுகவே

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இப்போது வரை கட்சி தாவல் தடை சட்டம் மற்றும் மாநில அரசுகளை கலைக்கும் மத்திய அரசின் செயல்களுக்கு எதிராக ஒரு நிலையான தீர்ப்பு  ஒரு அளவுகோலாக மாறியிருக்கிறது. இப்போது கூட உச்சநீதிமன்றத்தில் எஸ்ஆர் பொம்மை வழக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. ஒரு மாநில அரசை கலைப்பதற்கு என்னென்ன மாதிரியான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று மிகத் தெளிவான வரைமுறைகளை இந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. இதன்பிறகு எஸ்ஆர்​ பொம்மை முன்னால் பிரதமர் எச்.டி. தேவகவுடா தலைமையிலான மத்திய அரசில்  அமைச்சராகப் பதவி வகித்தவர். இப்படிப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் வந்தவர் பசவராஜ் பொம்மை. அனைத்துக் கட்சியினர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இடமும் சுமூகமாக பழகுபவர் என்பதால் இவர் முதல் தேர்வாக இருக்கிறார். பெங்களூருவில் இன்றிரவு நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் குழுக்கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பெயரை சட்டசபைங் குழு தலைவராக எடியூரப்பா முன்மொழிந்தார். அதாவது புதிய முதல்வரின் பெயர் எடியூரப்பாவால் அறிவிக்கப்பட்டது. இதை மூத்த அமைச்சர் கோவிந்த கார்ஜோல் வழிமொழிந்ததையடுத்து கர்நாடக பாஜக சட்டசபை குழுத் தலைவராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை பிற்பகல் 3.30 மணி அளவில் முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்க உள்ளார். லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த. ஹாவேரி மாவட்டத்தில் இவரது சொந்த ஊர் லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடத்தால் வற்புறுத்தப்பட்டதையடுத்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், லிங்காயத்து மடாதிபதிகள் மற்றும் சமுதாய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அதிருப்தியை போக்கும் வகையில் அதே சமுதாயத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா