மதுரையைச் சேர்ந்த அப்துல்லா இவர் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் மதுரை
காவல்துறையால்கைது செய்யப்பட்ட அப்துல்லாவுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பிருக்கலாம் என காவல்துறை சந்தேகித்ததையடுத்து அப்துல்லாவின் வழக்கை என்.ஐ.ஏ.வசம் மதுரை காவல்துறையினர் ஒப்படைத்த நிலையில் மதுரை புதூரில் உள்ள அப்துல்லா வீட்டில் அதிகாலை 5 மணி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல் தேனி மாவட்டம் சின்னமனூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரையைச் சேர்ந்த ஒருவர் மதம் மாறி சின்னமனூரில் பிரியாணி மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார். அவர் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளதையடுத்து இன்று காலை 5 மணியளவிலிருந்து சின்னமனூர் தேரடிப் பகுதியிலுள்ள அவரது கடை மற்றும் சில பகுதிகளில் தேசிய புலனாய்வு காவல்துறை தீவிரமாக சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளால் சிறிது நேரம் அங்கு பரபரப்புடன் ஏற்பட்டது.
கருத்துகள்