தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியுடன் ஒலிம்பிக் போட்டிகள்

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியுடன் ஒலிம்பிக் போட்டிகள் 


பிரச்சார் பாரதியின் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மற்றும் விளையாட்டுகளுக்கான பிரத்தியேக தொலைக்காட்சியான டிடி ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றில் ஒலிம்பிக் போட்டிகள் 2020, பிரம்மாண்ட முறையில் ஒலி/ ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முந்தைய நிகழ்ச்சிகள் முதல் போட்டிகளுக்கு பிறகு நடைபெறும் நிகழ்வுகள் வரை அனைத்தும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் மின்னணு தளங்கள் வாயிலாக நாடு முழுவதும் கொண்டு சேர்க்கப்படும்.

டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வெவ்வேறு ஒலிம்பிக் போட்டிகள் தினமும் காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை நேரலையாக ஒளிபரப்பப்படும். இதுகுறித்த தகவல்கள் டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் விளையாட்டிற்கான அகில இந்திய வானொலியின் சுட்டுரைத் தளங்களில் (@ddsportschannel, @akashvanisports). தினமும் வெளியிடப்படும். இது தவிர இரவு 8:30 மணி முதல் ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமான சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

டிடி நியூஸ் தொலைக்காட்சியில் ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கும் சனிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கும் ஒளிபரப்பாகும். இது தவிர பிரேக்ஃபாஸ்ட் நியூஸ், மிட் டே ப்ரைம் மற்றும் நியூஸ் நைட் ஆகிய நிகழ்ச்சிகளில் ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய சிறப்பு தொகுப்புகள் இடம்பெறும்.


அகில இந்திய வானொலியின் அனைத்து தலைநகர் அலைவரிசைகள், எஃப்எம் ரெயின்போ அலைவரிசை, மின்னணு வானொலி சேவை மற்றும் அகில இந்திய வானொலியின் இதர அலைவரிசைகளிலும், வலையோளி பக்கத்திலும் (http://www.youtube.com/user/ doordarshansports), டிடிஹச் சேவையிலும், இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் நியூஸ் ஆன் ஏர் செல்பேசி செயலி வாயிலாகவும் சிறப்பு நிகழ்ச்சிகளும், வர்ணனைகளும் ஒலிபரப்பப்படும். மேலும் அகில இந்திய வானொலியின் செய்தி சேவைகள் பிரிவிலும் ஒலிம்பிக் போட்டிகள் 2020 பற்றி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் ஒளி/ ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பிரச்சார் பாரதியின் மின்னணு தளமான பிரச்சார் பாரதி செய்தி சேவைகள், தனது சமூக ஊடகத் தளங்கள், செய்தித் தளங்கள், நியூஸ் ஆன் ஏர் செயலி மற்றும் டெலிகிராம் பக்கம் (https://t.me/pbns_india) வாயிலாக பெருவாரியான மக்களுக்கு கொண்டு சேர்க்கும்.கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா