முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் மீது ஊழல் செய்த சொத்துக்குவிப்பு வழக்கு

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அ.தி.மு.க வின் கரூர் மாவட்டச் செயலாளருமான


எம்.ஆர்.விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்கள் வாங்கிக் குவித்ததாக அவருக்குச் சொந்தமான 26 இடங்களில் ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறை ஜூலை மாதம் 22 ஆம் தேதி சோதனை நடத்தியது. கரூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களையும் ரூபாய். 25.56 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றியதாக ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்ததனிடையே, ஜூலை 24 ஆம் தேதி கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்என்றும், எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப் படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 


         அதோடு, 'நான் சென்னை, கரூர் ஆகிய இடங்களில் வாடகை வீடுகளில் தான் குடியிருக்கிறேன். இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன்' என்று தெரிவித்தார்.     
 இவருக்கு  ஆதரவாக  முன்னால் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் பேசினார் அதில் இவர்கள் எல்லாம் சுத்தமான நேர்மை நபர்கள் போல தெரிவித்தார். ஆனால்    உங்களது ஆட்சியின் போது தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடைபெற்ற போது சப்தநாடிகளும் அடங்கிப் போய் வாய்மூடி மௌனியாக இருந்தீர்கள் தானே; அப்போது வராத கோபம் எல்லாம் இப்போது ஏன் வருகிறது. இப்போது விஜயபாஸ்கர் சிக்கியதால் அப்புறம் அனைத்து முன்னாள் அமைச்சர்கள் என தொடர்ந்து ரெய்டு நடைபெறுமோ என்ற ஒரு வித பயம் இதுவரை நீங்கள் செய்த பாவமும் ஊழலும் கெஞ்சமா நஞ்சமா இது மக்கள் கேள்வி நீங்கள் தஞ்சம் அளித்தவருக்கு வஞ்சம் செய்ததை மக்கள் மறக்கவில்லை.       

                       

அதனால். நீங்கள் தவறு செய்யாத பட்சத்தில் ஏன் இப்போது பயப்பட வேண்டும். இதுவரை உங்களுக்கு முட்டுக்கொடுத்த உங்கள் ஆதரவு வட்டத்தில் இப்போது மறுத்து விட்டதாலா. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.ரெய்டு பண்ணுவதால் என்ன ஆபத்து வரப்போகுது தன் மீது குற்றம் இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும் குற்றமில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபியுங்கள் முன்னாள் அமைச்சர்கள் நீங்கள் செய்த செயல் மக்களுக்கு வரும் திட்டம் அதில் ஊழல் செய்து சேர்த்த சொத்து நீங்கள் பரம்பரை பணக்காரர்களா உங்கள் நிலை 1995 ல் என்ன இப்போது என்ன எல்லாம் மக்கள் அறிவார்கள்  இந்தச் சூழலில், ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

 முதல் குற்றவாளியாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், இரண்டாவது குற்றவாளியாக அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  2016  ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு கரூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, 55 சதவீதத்திற்கும் அதிகமாக சொத்துகள் சேர்த்தது உள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2016 தேர்தலின்போது வேட்புமனு தாக்கலில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ. 2,51,91,378 சொத்து வைத்திருந்ததாக தேர்தல் ஆணையத்திடம் மனுத்தாக்கல் செய்திருந்தார்

அதேபோல், சமீபத்தில் நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூரில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ. 8,62,35,648 சொத்து மதிப்பு உள்ளதாக வேட்புமனுத் தாக்கலில் குறிப்பிட்டிருந்தார். இதில், ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறையினர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது செய்த வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில், 55 சதவிகிதத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர். இதில், கரூர் நகர் பகுதியைச் சுற்றி உள்ள முக்கியமான இடங்களை எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது தம்பி சேகரும் கூட்டாக இயக்கிவரும் ரெயின்போ டையர்ஸ் மற்றும் ரெயின்போ ப்ளூ மெட்டல் மூலம் நிலங்களை வாங்கி குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு லஞ்சஒழிப்புதுறையினர் தெரிவித்தனர்.

இதில், ஒவ்வொரு இடமும் அரசு மதிப்பீட்டின்படி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்த ஐந்து வருடங்களில் ரூ. 6,10,44,270 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது சகோதரருடன் இணைந்து நடத்தும் ரெயின்போ டையர்ஸ் நிறுவனம் மூலம் கரூர் நகரில் 6 இடங்களில் 2,90,81,500 மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இருவரும் பங்குதாரராக உள்ள ரெயின்போ ப்ளூ மெட்டல் நிறுவனம் மூலம் கரூரில் இரண்டு இடங்களில் ரூபாய். 4,48,24,000 மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கலாம்:- குறிப்பாக  வாகனங்களில் ஒட்டும் ஸ்டிக்கர்.

குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு அமைச்சர் ஆணையர் மட்டும் கையெழுத்து போட்டு ரகசிய ஒப்பந்தம். 

100 ரூபாய் ஸ்டிக்கர் விலை 3000 ஆனது..நாலரை கோடி வாகனங்கள் தமிழ்நாட்டில்.

இது ஒரு உதாரணம்  மட்டுமே. இது போல் பல.

அடுத்து ஜிபிஎஸ் மோசடி என பரந்து விரிகிறது சொத்துக்கள் குவித்த விஜயபாஸ்கரின் ஊழல் சாம்ராஜ்யம். 

ஆனால் சொந்தமாக ஒரு வீடு கிடையாதாம்.

கரூரில் கொப்பரை தேங்காய்களின் நடுவில் இருந்து ஒரு மூட்டை ஆவணங்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

விஜயபாஸ்கர் குடும்ப நான்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு .லாக்கர்கள்சோதனையில் உள்ள நிலையில்.

உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பது போல் தப்பு செய்தால் இவர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் தண்டனை அடைந்தே ஆகவேண்டும்..

உலகமே காணாத ஊழல்..

அடிமை அமைச்சர்கள் அதிமுகவின் ஆட்சி கடைசி நான்கு ஆண்டுகள் ஊழலுக்காக மட்டுமே நடந்த ஆட்சி. 

ஒருவரும் தப்பிக்கக் கூடாது இப்போது தப்பிக்கவும் முடியாது. இதுவே நிலை.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.கரூர் மாவட்டத்திலுள்ள அவரது சாயப்பட்டறைகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும், சென்னையில் உள்ள அவரது வீடுகளிலும்  நடைபெற்ற  சோதனையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையையொட்டி கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு காவல்துறை குவிக்கப்பட்டனர். பணப்பரிவர்த்தனை செய்த ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் 2016 - 2021 காலகட்டத்தில் கரூரில் ரெயின்போ ட்ரையர்ஸ் மற்றும் ரெயின்போ ப்ளூ மெடல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு சொத்துகளை வாங்கியதாக தெரியவந்துள்ளது. இதில் விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமி பங்குதாரராக இருப்பதாகக் கூறப்படுகிறது.   இதனைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இது போன்ற நிகழ்வுகள் இவர்கள் நிகழ்த்திய  ஊழல் மீது வரும் என்ற பயம் காரணமாக இந்த அறிக்கை என மக்கள் பேசும் நிலை. முன்னதாக, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் 220 டெண்டர்களில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், `இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து நடந்த ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில் முகாந்திரம் இல்லை எனக் கூறி முதலமைச்சர், அமைச்சரவை, தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்' என்றார்.ஆனால், மனுதாரர்களோ, `இதில் ஆரம்பகட்ட விசாரணை முடிந்தாலும் வேலுமணிக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை. இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டனர்.அப்போது பேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், `கணக்கு தணிக்கை அறிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதால் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்" என்றார். இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா