கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது புதிய முதல்வர் யார் ?

 கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பிற்பகலில் தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகைத் தகவல் படி ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது
கர்நாடகாவில்  2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி எடியூரப்பா 4 வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜ.,க வில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்வர் பதவியை பா.ஜ., மேலிடம் வழங்கியது. 'அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்' என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதை ஏற்ற எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்று இன்றுடன் ஜூலை 26 ஆம் தேதி முடிய 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஜூலை 16 ஆம் தேதி டில்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது 2 ஆண்டுகள் நிறைவடைவதால் நிபந்தனைப்படி முதல்வர் பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக்கொண்டனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பாவும் உறுதி அளித்த நிலையில் எடியூரப்பாவின் 2 ஆண்டு சாதனையை கொண்டாடும் விதமாக, நிகழ்ச்சி ஒன்றுக்கு பெங்களூருவில் கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளதில் கலந்து கொண்ட எடியூரப்பா, 'என்னை 7 முறை எம்.எல்.ஏ.,வாகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. நான் கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்றுக் கொள்வேன். கட்சி மேலிடத்தின் முடிவை மீற மாட்டேன். எனக்கு எந்தக் குறையுமில்லை. எனக்கு ஆதரவாக மடாதிபதிகள் மாநாடு நடத்துவது அவசியமற்றது. இன்று பிற்பகலில் ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன்' எனக் கண்ணீர் மல்கப் பேசினார். அதன் படியே செய்தார்.ஆளுநர் முதலமைச்சர் ராஜினாமாவை ஏற்றதால் 

கலைந்தது எடியூரப்பா அமைச்சரவை.. கர்நாடக புதிய முதல்வர் யாரெனத் தேர்வு செய்ய கூடுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த முதல்வர் எப்போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியாயின. எடியூரப்பா சார்ந்த லிங்காயத்து சமுதாய மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

கர்நாடகாவில் சுமார் 17 சதவீதம் லிங்காயத்து மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எடியூரப்பாவுக்காக மட்டுமே, பாஜகவுக்கு தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள். எனவே அவர்களை எதிர்த்துக் கொண்டு பாஜக மேலிடம் எதுவும் செய்துவிட முடியாது. மேலிடம் சொல்வதை கேட்டு நடப்பதாக எடியூரப்பா சொன்னாலும்கூட, லிங்காயத்துகள் பாஜக தலைமைக்கு எதிராக பேட்டிகள் கொடுப்பதற்கு திரைமறைவில் எடியூரப்பா தூண்டுதல் இருப்பதாக சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற பிறகு, சுமார் 10 முறையாவது அவர் பதவி விலகப் போகிறார் என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இப்போது அவர் தனது பதவியை நிஜமாகவே ராஜினாமா செய்து விட்டார். இன்று இரண்டாவது வருட கொண்டாட்டங்களில் எடியூரப்பா அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

நேற்று அவரிடம், நீங்கள் நாளை, ராஜினாமா செய்யப் போகிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, கட்சி மேலிடத்திடம் இருந்து இதுவரை எனக்கு அந்த மாதிரி தகவல் வரவில்லை. கட்சி மேலிடம் எனக்கு தகவல் தெரிவித்தால் அதன் பிறகு நான் முடிவை அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார். இன்னொரு பக்கம் இரண்டு ஆண்டுகாலம் தனது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை விளக்கி இன்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் அவர் ராஜினாமா செய்வாரா இல்லையா என தகவல்கள் பேசப்பட்டது இன்றயை செய்தியாளர் சந்திப்பின்போது, தனது ராஜினாமா முடிவை எடியூரப்பா அறிவித்தார். பிறகு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார். இதையேற்றுக் கொண்டார் ஆளுநர். எனவே எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைந்தது. இருப்பினும் அவர் காபந்து முதல்வராக தொடருகிறார். ஒரு அமைச்சரவையின் தலைவர் முதலமைச்சர் தான். எனவே அவர் பதவி விலகினால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகியதாக அர்த்தம். எனவே புதிதாக முதல்வர் பொறுப்பை ஏற்கும்போது, அமைச்சர்களும் புதிதாக பதவி பிரமாணம் செய்து கொள்ள வேண்டியது கட்டாயமுள்ளது 

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூரில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்பார்வையாளர் இன்று மாலை தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய செயலாளர் சந்தோஷ், அமைச்சர் முருகேஷ் நிரானி உள்ளிட்டோர் பெயர்கள் புதிய முதல்வர் தேர்வுக்கான, உத்தேச பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் அந்த விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா