புதிய தொழிலாளர் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து லடாக் மற்றும் லே அதிகாரிகளுடன் தலைமை தொழிலாளர் ஆணையர் ஆய்வு

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் சட்டங்கள் மற்றும் புதிய தொழிலாளர் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து லடாக் மற்றும் லே அதிகாரிகளுடன் தலைமை தொழிலாளர் ஆணையர் ஆய்வு

லே பகுதியில் பல வளர்ச்சி திட்டங்களில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து தலைமை தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலாளர் அலுவலக தலைமை இயக்குனர் திரு டிபிஎஸ் நெகி ஆய்வு செய்தார்.  லடாக் யூனியன் பிரதேசம், பவர்கிரிட், என்எச்பிசி, பிஆர்ஓ, சிபிடபிள்யூடி, பிபிசிஎல், ஐஓசிஎல், எச்பிசிஎல், என்எச்ஐடிசிஎல் மற்றும் ஏஏஐ  திட்ட அதிகாரிகளுடன், தொழிலாளர் தொடர்பான  பிரச்சினைகள்  குறித்து  கடந்த 2 நாட்களாக தனித்தனியாக திரு நெகி விசாரித்தார். அங்கு நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார். 

லடாக்கில் கருதுங்சே மற்றும் பாங்காங் சாலையில் ஜார்கண்ட், பீகார், நேபாள தொழிலாளர்கள், உள்ளூர் லடாக் தொழிலாளர்கள் ஆகியோரை  திரு நெகி சந்தித்து அவர்களின் நலன் குறித்து விசாரித்தார்.  அவர்களின் உரிமைகள் குறித்து திரு நெகி விளக்கினார்.

பல்வேறு தொழிலாளர் சட்டங்களை பின்பற்றுவது தொடர்பாக, தலைமை தொழிலாளர் ஆணையரிடம் திட்டப் பணிகளுக்கு பொறுப்பு வகிக்கும் மூத்த அதிகாரிகள் எடுத்து கூறினர். இது குறித்து திரு நெகி திருப்தி தெரிவித்தார்.  தொழிலாளர் சட்டங்கள் மற்றும் புதிய தொழிலாளர் விதிமுறைகளை அமல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகளுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும் திரு நெகி விளக்கினார். 

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதிதாக தொடங்கவுள்ள  NDUW  இணையதளத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்யும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். 

தொழிலாளர்களுக்காக, திட்ட அதிகாரிகளால் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள  கூடாரங்களின் மாதிரிகளையும் திரு நெகி பாராட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா