நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் இணை அமைச்சர்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமைச்சரின் பதில்


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

அரசமைப்பு சட்டத்தின் படி ‘சுகாதாரம்’ மற்றும் ‘சட்டம் ஒழுங்கு’ மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருவதால், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கைக் குறித்த தகவல்கள் மத்திய அரசால் பராமரிக்கப்படுவதில்லை.

2021 ஜூன் 18 அன்று நாடு தழுவிய போராடத்தை நடத்திய இந்திய மருத்துவர் சங்கம், வன்முறைகளைத் தடுப்பதற்காகக் கடுமையானச் சட்டங்களை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

பணியில் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் அறிவுறுத்தியது.

மேலும், வன்முறை அச்சமின்றி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் பணியாற்றுவதை உறுதி செய்யுமாறும், வன்முறையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

2020 செப்டம்பர் 28 அன்று பெருந்தொற்று (திருத்த) சட்டம்-2000-ஐ இந்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் கீழ், சுகாதாரப் பணியாளர்கள் மீது வன்முறையில் ஈடுபடுவது பிணையில் வர முடியாத குற்றமாகும். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

தடுப்பு மருந்து வழங்கல் நிலவரம் குறித்த உண்மையின் ஒற்றை ஆதாரமாக விளங்கும் கோவின் தளத்தில் தடுப்பூசி பெற்ற அனைத்து பயனாளிகளின் தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன.

டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான அணுகல் இல்லாத நபர்கள் தடுப்பூசி வழங்கும் மையத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்து கொள்ளலாம். ஒரு கைபேசி எண்ணைக் கொண்டு நான்கு பேர் வரை பதிவு செய்து கொள்ளலாம்.

நாட்டின் முக்கியமான துறைகளில் ஒன்றாக சுகாதாரத் துறை விளங்குவதால், அதை ஊக்குவிப்பதற்கான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு, ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்‌ஷா திட்டம், மருத்துவக் கல்விக்கான மூன்று திட்டங்கள், ஆயுஷ் அமைச்சகத்தின் முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2021-22-ம் ஆண்டுக்கான இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு- பகுதி 2-க்கு 2021 ஜூலை 8 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2021 ஜூலை 1 முதல் 2022 மார்ச் 31 வரையிலான ஒன்பது மாதங்களில் ரூ 23,123 கோடி மதிப்பில் இது செயல்படுத்தப்படும்.

‘பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள்’ மாநிலப் பிரிவில் இருந்தாலும், பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவை தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி வருகிறது.

நாட்டின் அனைத்து இடங்களிலும் அத்தியவாசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், மக்களுக்கு ஏற்படும் செலவுகளை குறைப்பதற்காகவும், இலவச மருந்துகள் சேவைத் திட்டத்தை தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் அரசு செயல்படுத்தி வருகிறது.

பொது சுகாதார மையங்களுக்கு இலவசமாக மருந்துகளை வழங்குவதற்காக இத்திட்டட்த்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் கொவிட்-19 பாதிப்பை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. புறநகர். ஊரக மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் கொவிட் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்காக விரிவான வழிகாட்டு நடைமுறைகளை 2021 ஏப்ரல் 16 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது. சுகாதார உள்கட்டமைப்பும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பின் கீழ், கொவிட்-19 பொது சுகாதார சவாலை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குவதற்காக 2020 ஏப்ரலில் ரூ 15,000 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


சுகாதார வசதிகளை கிராமப்புறங்களில் மேம்படுத்துவதற்காக தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனனி சிசு சுரக்‌ஷா திட்டத்தின் கிழ் இலவச மருந்துகள், இலவச பரிசோதனை, இலவச ரத்தம் மற்றும் உணவு, இலவச போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. நடமாடும் மருத்துவ மையங்கள் மற்றும் தொலை மருத்துவ சேவைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக பிரதமரின் ஏழைகள் நலத் தொகுப்பின் கீழ் ஆயுள் காப்பீட்டு பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் விபத்து காப்பீடாக ரூ 50 லட்சம் வழங்கப்படுகிறது.

2021 ஜூலை 15 வரை, மொத்தம் 921 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தலா ரூ 50 லட்சம் இத்திட்டத்தின் கிழ் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்