அகமதாபாத்திலுள்ள கொவிட் தடுப்பூசி உற்பத்தி ஆலையை பார்வையிட்டார் மத்திய அமைச்சர்

இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்  அகமதாபாத்திலுள்ள கொவிட் தடுப்பூசி உற்பத்தி ஆலையை பார்வையிட்டார் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்காவை, ரசாயணம் மற்றும் உரத்துறை  இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று பார்வையிட்டார்.

இது குறித்து சுட்டுரையில் அமைச்சர் கூறுகையில், ‘‘ ஜைடஸ் கேடிலா நிறுவனம் ‘ஜைகோவ்-டி’ என்ற தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனம். இதுதான் உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான கொவிட்-19 தடுப்பூசி.

ஹெஸ்டர் பயோ சயின்ஸ் லிமிடெட் நிறுவனத்தையும் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார்.  இது குறித்து சுட்டுரையில் அவர் கூறுகையில், கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பதற்கு, ஹெஸ்டர் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

அவர்களின் முயற்சியை பாராட்டிய மத்திய அமைச்சர், அனைவருக்கும் இலவச தடுப்பூசியை உறுதி செய்ய தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு, அரசு அனைத்து உதவிகளும் அளிக்கும் என உறுதியளித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா