மகாராஷ்டிரா ராய்காட்டில் நிலச்சரிவு உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

பிரதமர் அலுவலகம் மகாராஷ்டிரா, ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவித்தார்
மகாராஷ்டிரா ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளது என பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள  சுட்டுரையில், "மகாராஷ்டிராவின் ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து  தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ மகாராஷ்டிரா ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன். உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். 

கனமழை காரணமாக மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள நிலவரம் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.’’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா