சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உள்ளிட்ட நீதிபதிகள் மாறுதல் விபரம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உள்ளிட்ட  நீதிபதிகள் மாறுதல் விபரம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியிலுள்ள நீதிபதிகள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு அனுப்பப்படுவது நடக்கும். தற்போது நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான நீதிபதிகளின் மூன்று மாத பணிக்காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைவதால் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குகளை விசா ரிக்கும் நீதிபதிகளும், அவர்கள் விசாரிக்கும் வழக்கு வகைளின் பட்டியலும் வெளியிடப்பட்டதன்விவரம் வருமாறு:

நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.ஆனந்தி ஆகியோர் முதல் அமர்வில் பொதுநல மனுக்கள், ரிட் மேல்முறையீட்டு மனுக்களையும், நீதிபதிகள் வி.பார்த்திபன், ஜெ.நிஷாபானு ஆகியோர் இரண்டாம் அமர்வில் ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரிக்கும்.

நீதிபதி டி.கிருஷ்ணகுமார் 2018 ஆம் ஆண்டு முதல் தாக்கலான தொழிலாளர், அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்கள், தியாகிகள் ஓய்வூதிய மனுக்கள், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் 2017 ஆம் ஆண்டு வரையிலான தொழிலாளர், அரசு பணி தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் மோட்டார் வாகனம், வாகன வரி, கலால், ஏற்றுமதி, இறக்குமதி, மத்திய கலால், கனிமம், வனம் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா 2015 ஆம் ஆண்டு முதலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும் விசாரிப்பர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முதல் மேல்முறையீடு மற்றும் 2014 ஆம் ஆண்டு வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும், நீதிபதி ஆர்.தாரணி 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான உரிமையியல் சீராய்வு மனுக்களையும், நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களையும், 2018 ஆம் ஆண்டு முதலான குற்றவியல் சீராய்வு மனுக்களையும் விசாரிக்க உள்ளனர்.

நீதிபதி ஆர்.பொங்கியப்பன் 2017 ஆம் ஆண்டு வரையிலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் குற்றவியல் சீராய்வு மனுக்கள், சிபிஐ, இலஞ்ச ஒழிப்பு வழக்குகளையும், நீதிபதி பி.புகழேந்தி ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கல்வி, நிலச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு, கையகப்படுத்தல், நில சட்டம் தொடர்பான ரிட் மனுக்கள், நீதிபதி ஜி.இளங்கோவன் 2018 ஆம் ஆண்டு முதலான குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 407, 482-ல் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், நீதிபதி கே.முரளிசங்கர் 2019 ஆம் ஆண்டு முதலான உரிமையியல் மனுக்கள் மற்றும் உரிமையியல் சீராய்வு மனுக்களையும் விசாரிப்பர். எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா