என்ஜாய் எஞ்சாமி பாடல் கலைஞர் பாக்கியம்மாள் மரணம்
சந்தோஷ் நாராயணன் மகளும் பாடகியுமான தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல் வெளியான மூன்று வாரங்களில் யூ-ட்யூபில் 76 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. பல பிரபலங்களும் பாடலுக்கு நடனமாடி, காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் பாடல் பிரபலமானது. குழந்தைகளைப் பாடல் கவர்ந்தது .
நிலத்தை இழந்த பூர்வப்பழங்குடி மக்களை மையப்படுத்தி என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டது. ’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் மூன்று மாதங்களில் யூ-ட்யூபில் 25 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது.’உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய பாடகி தீ. பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
காலா படத்தில் வரும்‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் வரும்‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் வரும்‘வாத்தி ரெய்டு போன்ற பல பாடல்களைப் பாடியுள்ளார் பாடகர் அறிவு. இவர்கள் இருவரும் இணைந்துப் பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் உலகமுழுவதும் பிரபலமாகி யூடியூபில் 276 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் பாடலில் தோன்றிய
பிரபல கிராமிய பாடகர் பாக்கியம்மா காலமானார் என்ற செய்தியை அறிவு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அறிவு, “பாக்கியம்மா, இழந்த பல உயிர்களுக்காக உங்கள் இதயத்தில் இருந்து நீங்கள் பாடியுள்ளீர்கள். இப்போது உங்கள் அகால இழப்புக்கான வார்த்தைகள் இல்லாமல் சிரமப்படுகிறேன் கலைஞர் இறக்கக்கூடும், ஆனால் அவர்களுடைய கலை எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருக்கும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்