விளையாட்டு வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது: மத்திய அமைச்சர்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தின் திட்டங்கள் மூலம் விளையாட்டு வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது: மத்திய அமைச்சர்


நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக  பதிலளித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாகூர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.


தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டம் (டாப்ஸ்) ஆகியவற்றுக்கான உதவி திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு போட்டித்திறன் மிக்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லக்கூடிய தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கேலோ இந்தியா திட்டம் இந்திய விளையாட்டு ஆணையத்தின் விளையாட்டு ஊக்குவிப்பு திட்டங்கள் மூலம் விளையாட்டு வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்பட்டு தகுந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 2028 ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்காக இந்திய வீரர்கள் மற்றும் குழுக்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்திய விளையாட்டு ஆணையத்தின் விளையாட்டு ஊக்குவிப்பு திட்டங்களுக்காக 189 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மொத்தம் 9025 வீரர்களுக்கு (5579 ஆண்கள் மற்றும் 3446 பெண்கள்) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 2967 விளையாட்டு வீரர்கள் (1494 ஆண்கள் மற்றும் 1473 பெண்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்சமயம், 147 தனிநபர் வீரர்கள் மற்றும் இரண்டு ஹாக்கி குழுக்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம், ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ள இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா