சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு கூட்டம்

சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு கூட்டம்


சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு கூட்டம் வரும் 16.07.2021 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து மட்டும், ஆலோசனைகள் / குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதன் விவரங்களை திரு.பி.முருகேசன், முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை 600 001 என்ற முகவரிக்கு 15.07.2021 தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கலாம்.

இந்தத் தகவல், சென்னை பொது அஞ்சல் அலுவலக முதன்மை அஞ்சல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா