குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் உருது உலகில் பேசப்படும் அழகிய மொழிகளில் ஒன்று: குடியரசுத் துணைத் தலைவர்
ஹைதராபாத் மற்றும் டெக்கான் பகுதியில் பண்டைய கால உருது நிலையங்கள் இருந்தன: குடியரசுத் துணைத் தலைவர்
பிராந்திய தலைவர்கள் பற்றி மேலும் பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என திரு.வெங்கைய நாயுடு மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டார்
குடியரசுத் துணைத் தலைவர் பல்வேறு உருது மற்றும் தெலுங்கு பெற்றுக்கொண்டார்
உலகில் பேசப்படும் அழகிய மொழிகளில் ஒன்றாக உருது உள்ளது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கூறினார். தாய் மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், நாம் அனைவரும் நமது மொழியிலேயே பேச வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின் டெக்கான் பள்ளத்தாக்கு பகுதியில், குறிப்பாக ஹைதராபாத்தில் ஏராளமான பண்டைய உருது நிலையங்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
திரு.வெங்கைய நாயுடு, மூத்த பத்திரிக்கையாளர் திரு.ஜே.எஸ்.ஃஇப்தேக்கார் எழுதிய 'உருது புலவர்களும் எழுத்தாளர்களும்' என்ற புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். மேலும் அவர், முன்னாள் பிரதமர் திரு.நரசிம்மராவ் பற்றி திரு.சத்யகாஷி பார்கவா எழுதிய புத்தகத்தை தெலங்கானா மாநில மொழி மற்றும் கலாச்சார துறை இயக்குநர் திரு.மம்மிடி ஹரிகிருஷ்ணாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர், திரு.மல்லிகார்ஜூன் எழுதிய 'நல்லகொண்டா கதலு' புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.
டெக்கானின் இரத்தினங்கள் என்ற தொடர் கட்டுரை மற்றும் கவிதை புத்தகம், டெக்கான் பகுதியில் வாழ்ந்த சிறப்பான 51 கவிஞர்கள் மற்றும் எழுத்தார்களின் வாழ்கை மற்றும் படைப்புகளைப் பற்றி பேசுகிறது. தற்கால ஹைதராபாத்தை தோற்றுவித்தவரான முகமது குலி குதுப் ஷப் காலத்திலிருந்து டெக்கான் பகுதியில் நிலவிய புகழ்வாய்ந்த கலாச்சார மற்றும் இலக்கிய பாரம்பரியத்தின் வேர்களை இப்புத்தகம் தேடிச் செல்கிறது.
முன்னாள் பிரதமர் திரு.நரசிம்ம ராவ் அவர்களின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை வெளிக்கொண்டு வந்ததற்காக தெலங்கானா அரசுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மற்றும் பிராந்திய தலைவர்கள் பற்றி புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்றும், இதன்மூலம் இளம் தலைமுறையினருக்கு அவர்களைப் பற்றி தெரிய வரும் என்றும் கூறினார்.
இறைவன் ராமனின் குணத்தை சிறந்த மனிதனுக்கான குணமாக குறிப்பிட்டு புத்தகம் வெளியிட்டுள்ள 'மனவோட்ட ராமா' புத்தகத்தின் எழுத்தாளருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். இறைவன் ராமனது குணநலன்கள் எக்காலத்துக்கும் ஏற்றவை என அவர் கூறினார்.
'நல்லகொண்டா கதலு' புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கைய நாயுடு, நாட்டுப்புற கதைகள் எழுதுவதன் அவசியத்தையும், கிராமிய கதைகளை எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறினார். இதே போல், அன்றாட வாழ்கையில் தொடர்பு உள்ள வகையில் குழந்தைகள் இலக்கியங்கள் எழுத முன்னெடுப்புகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
புத்தகங்களை வெளியிட முயற்சி மேற்கொண்ட எழுத்தாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.
கருத்துகள்