மகாராஷ்டிராவில் வெள்ள நிலவரம் குறித்து முதல்வருடன் பிரதமர் பேசினார்

பிரதமர் அலுவலகம் மகாராஷ்டிராவில் வெள்ள நிலவரம் குறித்து முதல்வருடன் பிரதமர் பேசினார்


பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அம்மாநில முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார்.

"மகாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேசினேன். நிலைமையை சீரமைக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்," என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார். மஹாராஷ்டிராவின் ஆளுமை நிறைந்த தேசிய வாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு சரத்பவார் அவர்கள் புதல்வியும்,தேசிய வாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி.சுப்ரியா சுலே தகவலில் "நமது பாரமதி மக்களவை தொகுதியின் போர், வேலா, முல்ஷி தாலுகாவில் ஜூலை 21 ஆம் தேதியில் கனமழை பெய்து பெரிய சேதத்தை

ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் வீடுகள், பள்ளிகள், அரசு கட்டடங்கள், சாலைகள், சாலைகளின் இணைப்புக் கிராமங்கள் உட்பட விவசாயமும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்கள் மற்ற கிராமங்களுடன் தொடர்பை இழந்துவிட்டன.

இதை கருத்தில் கொண்டு உதவி அங்கு வழங்கப்பட வேண்டும் மற்றும் குடிமக்கள் சில இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும். பூனாவின் மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில். டாக்டர் ராஜேஷ் தேஷ்முக் உதவி மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சேதம் மதிப்பீடுகள் செய்ய வேண்டும் என்றும் கடிதம் மூலமாகக் கேட்டுக் கொண்டேன்.                        நான் தொடர்ந்து இந்தச்

சூழ்நிலைகளைக் கவனித்து அரசு மற்றும் நிர்வாகத் தொடர்பிலுள்ளேன். குடிமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் அரசும் நிர்வாகமும் கூறும் வழிமுறைகளை பின்பற்றவும். கனமழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதனால் தான் நதிக் கரையில் வாழும் குடிமக்களை சிறப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். அரசு நம்முடன் உறுதியாக நிற்கிறது. இந்த நெருக்கடியை நாம் அனைவரும் ஒன்றாக எதிர்கொள்வோம்" எனத் தெரிவித்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா