பெற்றோரை இழந்து பாட்டி பாதுகாப்பில் ஹாஸ்டலில் படித்த ரேவதி ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு

ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை வீராங்கனை. 

ரேவதி வீரமணி (வயது23), மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர், ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப்பிரிவில் பங்கேற்க உள்ள

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மூன்று தமிழக வீராங்கனைகளில் ஒருவர்

நான்காம் வகுப்பு படித்த போது தந்தையை இழந்தவர், ஒரு வருடத்தில் தாயையும் இழந்தவரை இவரது பாட்டி வளர்த்து, டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க வைத்து

தற்போது இவர், தென்னக இரயில்வேயில் பணி புரிகிறார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த தனலட்சுமி சேகர் மற்றும் சுபா வெங்கடேசன்  லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் ஆகியோரும் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கு தேர்வாகியுள்ளனர்  தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேவதி வீரமணி, நாகநாதன் பாண்டி ஆகிய அனைவரும் சிறப்பாக விளையாடி, வெற்றி பெற்று தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்திட முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் மதுரை தடகள வீராங்கனை ரேவதி வீரமணி பங்கேற்கும் 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் அவருடன் சேர்ந்து திருச்சி தனலெட்சுமி, சுதா வெங்கடேசன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். 4 * 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டின்  ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் பங்கேற்கின்றனர். மேலும், தமிழகத்தில் பிறந்து வெவ்வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்து வாழும் மூன்று வீரர் - வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப் படகு போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து  11 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தடகள பிரிவில் இதுவரை 26 இந்திய வீரர் - வீராங்கனைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில், ஆண்கள் பிரிவில் 17 பேரும், மகளிர் பிரிவில் 9 பேரும் அடங்கும். தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள், 2 வீரர்களும் தகுதி பெற்றுள்ளனர்.22 வயதான ரேவதி, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ரேவதி, பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து இரண்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்தவர், 12 ஆம் வகுப்பில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று திறம்பட ஓடியுள்ளார். ரேவதியின் திறமையைக் கண்டு பயிற்சியாளர் கண்ணன், அடுத்தகட்ட போட்டிகளுக்கு கோச்சராக இருந்து தயார்படுத்தியுள்ளார். பின்னர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றார். 'ஷூ' கூட இல்லாமல் பயிற்சி பெற்ற ரேவதி, விளையாட்டு வீரர்களின் உச்ச கனவான ஒலிம்பிக்கில் தடம் பதிக்கிறார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து பல்வேறு பிரிவுகளில் திறமையான வீரர், வீராங்கனைகள் தேர்வாகி வருகின்றனர். அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த ரேவதி வீரமணி என்பவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக்கிற்கான இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ள ரேவதி, 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தகுதிப் பெற்றுள்ளார். கடந்த 4 ஆம் தேதி நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து ரேவதி சாதித்ததை அடுத்து, ஒலிம்பிக்கிற்குத் தேர்வானார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள மையத்தில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.  டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 11 பேர் தேர்வாகியுள்ளனர். அதில், மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணியும் தேர்வாகியுள்ளார்.  நிதியமைச்சர் தனது செய்தியில்.  'மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அவர் பதக்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்! எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா