வன வளங்களை நிர்வகிப்பதில் பழங்குடியினர் மற்றும் வனப் பகுதியில் வசிப்பவர்களுக்கு கூடுதல் அதிகாரம்

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வன வளங்களை நிர்வகிப்பதில் பழங்குடியினர் மற்றும் வனப் பகுதியில் வசிப்பவர்களுக்கு கூடுதல் அதிகாரம்: மத்திய அமைச்சர்கள் கூட்டறிக்கை வெளியீடு

வன வளங்களை நிர்வகிப்பதில், பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூட்டாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு கூட்டறிக்கை தில்லியில்  காலை 11 மணிக்கு கையெழுத்திடப்படவுள்ளது.


இந்நிகழ்ச்சி நேரடியாகவும், காணொலி மூலமும் நடைபெறவுள்ளது. இதில் வனத்துறை செயலாளர் திரு ரமேஷ்வர் பிரசாத் குப்தா, பழங்குடியின நலத்துறை செயலாளர் திரு அனில் குமார் ஜா மற்றும் அனைத்து மாநில செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இதில் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் திரு பபுல் சுப்ரியோ மற்றும் பழங்குடியின விவகாரத்துறை இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங் சருதா ஆகியோர் கலந்து கொள்வர். 

இந்த கூட்டறிக்கை, வன உரிமை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பானது ஆகும்.                             பாஜக தோல்வியை உணரத் தொடங்கியதன் விளைவாகவே இந்த அறிவிப்பை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உற்று நோக்கும் நிலையில

ஏனைய பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார சமூக இட ஓதுக்கீட்டை 2018 சட்டம் மூலம் எடுத்ததை திரும்ப தருகிறது.


மலைவாழ் மக்களுக்கு அதிக உரிமைகள் தருகிறது.

கூட்டுறவுத்துறை என்று ஒன்றை உருவாக்கிறது. கூட்டுறவுத்துறையை இந்திய மைய வங்கியுடன் இணைக்கும் அதிகாரம் பின் விளைவுகளை தந்த காரணம்.


ரபேல் விவரங்கள் பிரான்சில் ஆய்விற்கு உள்ளாகிறது.

அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் உள்ளீடு என்று தனது பயங்களை வெளிப்படுத்துகிறது

ஆனால் இவை எல்லாம் இழந்த பாஜக செல்வாக்கை ஈடுகட்டும் முயற்சி தான் என் அரசியல் பார்வையாளர்கள் கருத்து. ஆனால்  பாஜகவுக்கு அரசியல் வெற்றி என்பது எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையவில்லை  

வனஉரிமை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் கூட்டறிக்கை ஒப்பந்தத்தில் சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் கையெழுத்து

மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக செயலாளர் திரு ஆர்.பி.குப்தா மற்றும் பழங்குடியின விவகாரத்துறை செயலாளர் திரு அணில் குமார் ஜா ஆகியோர் இடையே கூட்டறிக்கை ஒப்பந்தம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா இடையே தில்லியில் இன்று கையெழுத்தானது. 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களிடம் தெரிவிக்கப்பட்ட இந்த கூட்டறிக்கை, 2006ம் ஆண்டு வனஉரிமை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதையும் மற்றும் வனப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலை பயன்படுத்துவதையும் குறிக்கிறது

இந்நிகழ்ச்சியில் பேசிய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, ‘‘பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் பருவநிலை மாற்ற முயற்சிகளில்  பழங்குடியினர் மற்றும் வனப்பகுதியில் குடியிருப்பவர்களால் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்ற முடியும். இன்றைய கூட்டறிக்கை  வனவாசிகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை நோக்கியும், வன நிர்வாகத்தின் செயல்பாட்டில் அத்தகைய சமூகங்களின் பங்களிப்பை மேம்படுத்துவதாகவும் உள்ளது’’ என்றார். .

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், ‘‘தகவலை பரிமாறாமல் பணியாற்றுபவர்கள், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இடையில்  ஒன்றிணைவை அடைவதற்கான முன்னுதாரன மாற்றத்தை இந்த கூட்டறிக்கை குறிக்கிறது. இது மிகவும் சாதகமான வளர்ச்சி. பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளின் மேம்பாட்டில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அனுமதிக்கப்பட்ட ஏகலவ்யா மாதிரி உறைவிட பள்ளிகளின் எண்ணிக்கை 620 ஆக உயர்ந்துள்ளது’’ என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா