பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கோட்டக்கல் பி கே வாரியர் மற்றும் காசி குருக்கள் ராமேஸ்வர் பூரி மறைவிற்கு பிரதமர் இரங்கல்.

பிரதமர் அலுவலகம் பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பி கே வாரியரின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்.


பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பி கே வாரியரின் மறைவிற்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

“டாக்டர் பி கே வாரியரின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஆயுர்வேதத்தை பிரபலப்படுத்துவதில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்.

காசி அன்னபூர்ணா கோவில் மூத்த குருக்கள் திரு ராமேஷ்வர் புரி அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்.
காசி அன்னபூர்ணா கோவில் மூத்த குருக்கள் திரு ராமேஷ்வர் புரி அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை உலக பிரசித்தி பெற்ற வைத்திய சாலையின் அறங்காவலர் பி.கே. வாரியார் 100 வயதானாலும் ஆயுர்வேத மருத்துவத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டார். கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிர்வாகத்தையும் கவனித்தார்.

கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையை நிறுவிய பி.எஸ்.வாரியர் 1944 ஆம் ஆண்டில் காலமான பின் அவரது மருமகனான பி.எம் வாரியர் பொறுப்பேற்றார். 1953 ஆம் ஆண்டில் விமான விபத்தில் அவரும் இறந்துவிட அவரது சகோதரரான பி.கே.வாரியர் அறங்காவலரானார்.

பன்னியம்பள்ளி கிருஷ்ணவாரியர் என்பதன் சுருக்கமே பி.கே.வாரியர். அவர் பொறுப்பேற்ற பின்னரே கோட்டக்கல் வைத்தியசாலை உலக அளவில் பிரசித்தி பெற்றது. 100 வயதான பி.கே.வாரியர் கோட்டக்கலில் உள்ள அவரது கைலாசமந்திரம் இல்லத்தில் காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் 

“காசி அன்னபூர்ணா கோவில் மூத்த குருக்கள் திரு ராமேஷ்வர் புரி அவர்களின் மறைவால் மிகவும் துயருற்றேன். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ஆன்மிக மற்றும் சமூக சேவைகள் பலவற்றை மக்களுக்காக அவர் ஆற்றியுள்ளார். அவரது தொண்டு என்றென்றும் நமக்கு ஊக்கமளிக்கும். ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா