ஹரியானா என்சிசி மாணவிகள்.போர் வீரருக்கு மரியாதை

பாதுகாப்பு அமைச்சகம்  போர் வீரருக்கு என்சிசி மாணவிகள் மரியாதைஹரியானா என்சிசி 3வது பட்டாலியன் மாணவிகள், ஹரியானாவின் ஹிசர் மாவட்டத்தில், மிர்சாபூர் கிராமத்தில் சமுதாய நிகழ்ச்சியை நடத்தினர். இதில் 1971ம் ஆண்டு போரில் உயிர்நீத்த வீரர் இரண்டாம் லெப்டினன்ட் ஹவா சிங்கின் சிலை சுத்தம் செய்யப்பட்டது.

இவர் வீர் சக்ரா விருது பெற்றவர். மிர்சாபூர் கிராமத்தில் எழுப்பப்பட்ட இந்த சிலையை, ஹரியானா என்சிசி மாணவிகள் பட்டாலியன் கடந்தாண்டு முதல் பராமரித்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் என்சிசி மாணவிகள் கலந்து கொண்டனர். நடைபெறவுள்ள கார்கில் தினத்தின் முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி கிராம மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்தியது.

என்சிசி மாணவிகளின் செயலை கிராமத்தினர் வரவேற்றனர்.

இரண்டாம் லெப்டினன்ட் ஹவா சிங் கடந்த 1971ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது நடந்த போரில் அவர் மிகவும் அரிதான வீரதீர செயல் புரிந்து நாட்டுக்காக உயிர்நீத்தார்.

போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, இது போன்ற சிலை சுத்தப்படும் நிகழ்ச்சிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா