தமிழ்நாடு அறிவியல் இயக்கம். பள்ளி மீண்டும் திறப்புக் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வு

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இணைய வழியில் தற்போது வழங்கப்படுகிறது. பத்து நாட்கள் முன்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதெரிவித்த விபரம்.    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமெனக் கூறப்பட்டாலும் மூன்றாவது அலை குறித்து வரும் தகவல்கள் சற்று கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், மாணவர்கள் உளச்சோர்வில்லாமல் எப்போது கல்வி கற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில்“இம்மாத இறுதிக்குள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணவர்களுக்கு போதிய அளவில் கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிதி நிலை அறிக்கையில் கல்விக்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏற்கனவே அரசும் நீதிமன்றமும் தெளிவாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக ஆதாரப்பூர்வமான புகார்கள் வந்தால்? சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

பள்ளிகள் திறப்பு குறித்துப் பேசியவர், “பள்ளிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத் துறையினருடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். எனவே அதற்கேற்றார் போல் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.                   இச்சூழலில் தற்போது தமிழகத்தில் ஒன்றரையாண்டு காலமாக மூடப்பட்டுக் கிடக்கும் பள்ளிகள் குறித்தோ, அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி குறித்தோ  கவலைப் படாத நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ன ஆனதெனக் காணவும், அதன் மூலம் அரசுக்கு கோரிகைகள்  எழுப்பவும் தமிழகமெங்கும் சுமார் 2000 குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் ஆய்வு நடத்தியது. 

அதில் பெறப்பட்ட கருத்துக்கள் நேற்று செய்தியாளர்களிடம் பகிரப்ப்பட்டன. அதில் மீண்டும் பள்ளிக்கு வர இயலாது முடியாது என 10 சதம் குழந்தைகள் சொல்ல பள்ளி இடைநிற்றல் என்பது 5 சதமாவது இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

 உண்மையில் இணைய வழி பாதிப்பு, போன், டேப், லேப்டாப் இல்லாமல் உண்மையிலேயே இணைய வழி என்பது பெரிதான தோல்வி என்பதும் வெளிச்சமானது.

வீட்டை விட பள்ளிகளே மகிழ்ச்சியான இடம் என்று 84 சதமும், இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியதிருப்பதால் பெண் குழந்தைகளுக்கு பள்ளிகளில் கிடைத்துவந்த பாதுகாப்பு இப்போது இல்லாததால் மிகவும் சிரமமாக இருக்கிறது என 60 சதம் பேரும் தெரிவித்துள்ளனர். 

ஆஹா வடநாடு போல ஒன்றுமில்லை என பெருமை கொண்டிருக்கும் நமக்கு நாளொன்றுக்கு ரூ.50 ஊதியத்திற்கு கூட குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படும் என்கிற அநீதியும் வெட்ட வெளிச்சமானது. முன்பைவிட இப்போது கல்வித் துறை சிறந்த முறையில் செயல் பட்ட போதும்

இனிமேல் கொரானா பெருந்தொற்று காலத்தில் பலியான கல்வியை குறித்து பேசவும், இனி செய்ய வேண்டியவை  நிறைய உண்டு என்பதே அவர்களின் ஆய்வின் தகவலாக கூறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா