உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்து திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வபதில்

கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்து திட்டங்கள் குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் பதில்  உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்து திட்டங்கள் குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிபோக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மக்களவையில்  இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தேசிய நீர்வழி போக்குவரத்து வளர்ச்சி திட்டம் - 1-க்கான செலவு:

தேசிய நீர்வழி போக்குவரத்து திட்டம்-1-க்கான ஆய்வுகள் பிரபல நிறுவனங்கள் மூலம், 2016ம் ஆண்டில் முடிக்கப்பட்டன.

தேசிய நீர்வழிபோக்குவரத்து - 1 திட்டத்தின் திறனை அதிகரிக்க மொத்த செலவு, 2021 ஜூன் 30ம் தேதி வரை ரூ.1885.98 கோடி.

ஹால்டியா- வாரணாசி இடையே நீர்வழிப் போக்குவரத்து திறனை அதிகரிப்பதற்கு தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியுதவியை மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி (IBRD)/ உலக வங்கி ஆகியவை வழங்கின.
நீர்வழிப் போக்குவரத்து திட்டத்துக்கு நிதியுதவி பெற 375,000,000 அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

உள்நாட்டு நீர்வழிபோக்குவரத்து

தேசிய நீர்வழிப் போக்குவரத்து  திட்டம் -1 (கங்கை -பகிரதி-ஹூக்ளி ஆற்றில் அலகாபாத் முதல் ஹால்டியா வரை), தேசிய நீர்வழிப் போக்குவரத்து திட்டம் -2 (பிரம்மபுத்ரா நதியில் துப்ரியிலிருந்து சாதியா வரை), தேசிய நீர்வழிப் போக்குவரத்து திட்டம் - 3) (மேற்கு கடற்கரை கால்வாயில் கொட்டபுரம் முதல் கொல்லம் வரை) ஏற்கனவே போக்குவரத்து வசதிகள், படகுத் துறைகள், டெர்மினல்கள், சரக்குகள் ஏற்றி இறக்கும் வசதிகள்  ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த தேசிய நீர்வழிப் போக்குவரத்து திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

மேலும், அம்பா, மண்டோவி, நர்மதா, ராஜ்புரி க்ரீக், ரேவாடண்டா கிரீக் -குண்டலிகா ஆறு, சாஸ்திரி ஆறு-ஜெய்காட் கிரீக், சுந்தர்பன்ஸ் நீர்வழி போக்குவரத்து, தபி ஆறு, ஜூவாரி நதி ஆகியவற்றில் நீர்வழிப் போக்குவரத்து செயல்பாட்டில் உள்ளது.

தேசிய நீர்வழிபோக்குவரத்து -1ன் வழித்தடம்:


தேசிய நீர்வழிப்போக்குவரத்து-1-ன் வழித்தடம் சுல்தான்கன்ஜ் பகுதியிலிருந்து ககல்கான் வரை, விக்ரம்ஷிலா கங்கை டால்பின் சரணாலயம் வழியாக செல்கிறது.

முதலாவது திட்டத்தில், ஹால்டியா-வாரணாசி வழித்தடமும் உருவாக்கப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரிவான ஆய்வும் நடத்தப்பட்டது. கங்கை நதியில் உள்ள டால்பின்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர்வழி போக்குவரத்து விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சாகர் மாலா கடல் விமான சேவை மத்திய துறைமுகம், கப்பல்போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனம் சாகர்மாலா வளர்ச்சி நிறுவனம், கடல் விமான சேவைக்கான  டெண்டருக்கு அழைப்பு விடுத்தது. மேலும், ஆர்சிஎஸ்-உதான் திட்டத்தின் கீழ் இந்தியாவில் கடல் விமான சேவைகளை இணைந்து உருவாக்க, மத்திய துறைமுகம், கப்பல்போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை கடந்த ஜூன் 15ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா